இந்த வயதில் இப்படி நடிக்கவே விருப்பம் : ஸ்ரீலீலா | கூலி படம் ரிலீஸ் : பெங்களூர் ராமகிருஷ்ணா ஆசிரமத்துக்கு சென்ற ரஜினி | ஷாரூக், சுனில் ஷெட்டி, அமிதாப், பாபி தியோல் வரிசையில் அமீர்கான் | வளைந்து செல்லாதீர்கள், தைரியமாக இருங்கள் : பெண்களுக்கு சுவாசிகா அறிவுரை | சினிமாவில் நடிக்க வைப்பதாகக் கூறி சிறுமிக்கு வன்கொடுமை; மலையாள நடிகை கைது! | 'கைதி 2'க்கு முன்பாக ஹீரோவாக நடிக்கப் போகும் லோகேஷ் கனகராஜ் | ‛பாகுபலி தி எபிக்' ஐமேக்ஸ் வடிவிலும் வெளியாகிறது : படக்குழு அறிவிப்பு | ‛கூலி': 3 மில்லியனை நெருங்கும் பிரிமியர் வசூல் | ரசிகர்களுடன் ‛கூலி' படம் பார்த்த திரைப்பிரபலங்கள் | ‛குட் டே' முதல் ‛ஜேஎஸ்கே' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? |
'அறிந்தும் அறியாமலும், பில்லா, ஆரம்பம்' உள்ளிட்ட படங்களை இயக்கிய விஷ்ணுவர்தன் தமிழில் கடைசியாக 2015ல் வெளிவந்த 'யட்சன்' என்ற படத்தை இயக்கினார்.. அதற்குப் பின் கடந்த ஆறு வருடங்களாக தமிழில் எந்தப் படத்தையும் இயக்கவில்லை. தற்போது ஹிந்தியில் 'ஷெர்ஷா' என்ற படத்தை இயக்கியுள்ளார்.
சித்தார்த் மல்கோத்ரா, கியாரா அத்வானி மற்றும் பலர் நடித்துள்ள இப்படம் நாளை ஆகஸ்ட் 12ம் தேதி அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. கார்கில் போரில் ஒரு கடினமான தாக்குதலலை பாகிஸ்தானுக்கு எதிராக நடத்தி தன்னுடைய 24 வயதிலேயே வீர மரணமடைந்த கேப்டன் விக்ரம் பாத்ராவின் பயோபிக்தான் இந்த 'ஷெர்ஷா'. பாகிஸ்தான் ராணுவத்தின் பேச்சுக்களில் அவர் 'ஷெர்ஷா' எனக் குறிப்பிடப்பட்டவர். அந்தப் பெயரையே படத்தின் தலைப்பாக வைத்துள்ளார்கள்.
இப்படத்தில் விக்ரம் பாத்ரா கதாபாத்திரத்தில் சித்தார்த் மல்கோத்ரா நடித்துள்ளார். இதற்காக அவர் சிறப்புப் பயிற்சிகளை மேற்கொண்டு நடித்துள்ளார். விக்ரம் பாத்ரா, அவரது சகோதரர் விஷால் பத்ரா என இரண்டு வேடங்களில் நடித்துள்ளார் சித்தார்த்.
கடந்த வருடம் தியேட்டர்களில் வெளியாகி இருக்க வேண்டிய படம். கொரோனா தொற்று காரணமாக தள்ளி வைத்தார்கள். தற்போது ஓடிடி தளத்தில் வெளியிடுகிறார்கள்.
கடந்த மாதம் யு டியுபில் வெளியான 'ஷெர்ஷா' டிரைலருக்கு இதுவரையில் 4 கோடிக்கும் மேற்பட்ட பார்வைகள் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.