23 ஆண்டுகளுக்கு பின் நாளை மறுநாள் ரீ-ரிலீஸ் ஆகிறது சுந்தரா டிராவல்ஸ் | ஆகஸ்ட் 8ல் 13 படங்கள் வெளியீடா ??? | வரவேற்பைப் பெறாத 'பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீமேக் | கணவர் கிரிஷ் உடன் பிரிவா... : நடிகை சங்கீதா மறுப்பு | தீபாவளி மாதத்தில் வெளியாகும் அனிமேஷன் படம் | பிளாஷ்பேக்: கமர்ஷியல் ஆக்ஷன் படம் இயக்கிய விசு | முகபருவிற்கு உமிழ்நீர் மருந்து என்கிறார் தமன்னா | 90வது பிறந்த நாளை கொண்டாடிய எம்.என்.ராஜம் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்திற்கு பாதுகாப்பு கேட்டு மனு | பிளாஷ்பேக் : இயக்குனராக, தயாரிப்பாளராக தோற்ற டி.ஆர்.மகாலிங்கம் |
'பேட் மேன்' படத்தின் மூலம் இந்திய அளவில் சிறந்த இயக்குனராக அறியப்பட்டவர் ஆர்.பால்கி. தற்போது அவர் துல்கர் சல்மான் மற்றும் சன்னி தியோல் நடிப்பில் புதிய படத்தை இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பூஜா பட் மற்றும் ஸ்ரேயா தன்வந்திரி ஆகியோரும் அந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
துல்கர் சல்மான் ஏற்கனவே பாலிவுட்டில் கார்வான், ஜோயா பேக்டர் என்ற இரு படங்களில் நடித்துள்ளார். தற்போது பால்கி இயக்கத்தில் மீண்டும் ஒரு பாலிவுட் படத்தில் இணைத்துள்ளார். இந்தப் படம் குறித்து அவர் அதிரகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்தப் படம் 2022-ம் தொடக்கத்தில் ஆரம்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது அந்தப் படத்தில் நடிகர் அமிதாப் பச்சன் நடிக்க இருப்பதாக பாலிவுட் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. "அமிதாப் பச்சன் எனது படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிப்பார். அவரை நடிக்க வைக்கவேண்டும் என்பதற்காக நான் அவரை என் படத்தில் இணைக்க மாட்டேன். எப்பொழுதும் என் சினிமாவில் இருப்பதுபோல அவருடைய இருப்பு இந்த படத்திலும் தீர்க்கமானதாக இருக்கும்." என்கிறார் பால்கி.