ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு, இரட்டை இலை சின்னம் அதிமுக.வுக்கு கிடைக்க உதவுவதாக கூறி, அதற்கு 50 கோடி கமிஷன் வேண்டும் என்று கேட்டவர் பண புரோக்கர் சுகேஷ் சந்திரசேகர். இதற்கு முன்பணமாக 1.3 கோடியை பெறும்போது அவர் கையும் களவுமாக பிடிபட்டார்.
இந்த வழக்கில் சிறையில் இருக்கும்போதே அரசு உயர் அதிகாரிகள் போல பேசி, பதவி உயர்வு, இடமாற்றம் பெற்று தருவதாக கூறி 200 கோடி நிதி மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக வழக்கு பதிந்த அமலாக்கத்துறையினர் சுகேஷிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை உள்பட பல்வேறு இடங்களில் உள்ள சுகேஷூக்கு சொந்தமான வீடுகள், அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தியது. அப்போது, சென்னையில் உள்ள சுகேஷின் சொகுசு பங்களாவில் 16 சொகுசு கார்கள், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக பிரபல பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசிடம் அமலாக்கத்துறை நேற்று விசாரணை நடத்தியது. அப்போது சுகேஷின் பண மோசடி தொடர்பாக அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டது. ஜாக்குலினுக்கும், சுகேசுக்கும் தனிப்பட்ட முறையில் பழக்கம் இருந்திருக்கிறது. ஜாக்குலின் மூலம் பல பண பரிமாற்றங்களை சுகேஷ் செய்திருக்கிறார் என்று அமலாக்கத்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கிறது. ஜாக்குலின் தற்போது சல்மான்கானின் நெருங்கிய தோழியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.