23 ஆண்டுகளுக்கு பின் நாளை மறுநாள் ரீ-ரிலீஸ் ஆகிறது சுந்தரா டிராவல்ஸ் | ஆகஸ்ட் 8ல் 13 படங்கள் வெளியீடா ??? | வரவேற்பைப் பெறாத 'பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீமேக் | கணவர் கிரிஷ் உடன் பிரிவா... : நடிகை சங்கீதா மறுப்பு | தீபாவளி மாதத்தில் வெளியாகும் அனிமேஷன் படம் | பிளாஷ்பேக்: கமர்ஷியல் ஆக்ஷன் படம் இயக்கிய விசு | முகபருவிற்கு உமிழ்நீர் மருந்து என்கிறார் தமன்னா | 90வது பிறந்த நாளை கொண்டாடிய எம்.என்.ராஜம் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்திற்கு பாதுகாப்பு கேட்டு மனு | பிளாஷ்பேக் : இயக்குனராக, தயாரிப்பாளராக தோற்ற டி.ஆர்.மகாலிங்கம் |
பாலிவுட்டின் நட்சத்திர தம்பதியர் நடிகர் ரன்வீர் சிங் - நடிகை தீபிகா படுகோனே. காதலித்து, மணந்து கொண்ட இவர்கள் சினிமா, விளம்பரம் என பிஸியாக உள்ளனர். மும்பையில் கடற்கரை ஏரியாவான அலிபாக் பகுதியில் ரூ.22 கோடிக்கு ஆடம்பர சொகுச பங்களாவை வாங்கி உள்ளனர். 2.25 ஏக்கர் பரப்பளவு உடைய இந்த சொத்தில் 18 ஆயிரம் சதுர அடிக்கு வீடு உள்ளிட்ட கட்டடங்கள் உள்ளது. செப்., 13ம் தேதி இந்த சொத்திற்கான பத்திரபதிவு நடந்துள்ளதாம். ஸ்டாம்ப் டூட்டியாக மட்டும் ரூ1.32 கோடி வரி செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடற்கரை பகுதியாக இந்த ஏரியா இருப்பதால் பல தொழிலதிபர்களும், திரை நட்சத்திரங்களும் இந்த ஏரியாவில் இதுபோன்று சொத்துக்களை வாங்கி வருகின்றனர். தற்போது மும்பையில் பிரபாதேவி பகுதியில் 4 மாடி கொண்டு குடியிருப்பில் தீபிகா, ரன்வீர் வசித்து வருகின்றனர். இந்த சொத்துக்கள் தவிர இவர்களுக்கு மும்பை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களிலும் சொத்துக்கள் உள்ளன.