இந்த வயதில் இப்படி நடிக்கவே விருப்பம் : ஸ்ரீலீலா | கூலி படம் ரிலீஸ் : பெங்களூர் ராமகிருஷ்ணா ஆசிரமத்துக்கு சென்ற ரஜினி | ஷாரூக், சுனில் ஷெட்டி, அமிதாப், பாபி தியோல் வரிசையில் அமீர்கான் | வளைந்து செல்லாதீர்கள், தைரியமாக இருங்கள் : பெண்களுக்கு சுவாசிகா அறிவுரை | சினிமாவில் நடிக்க வைப்பதாகக் கூறி சிறுமிக்கு வன்கொடுமை; மலையாள நடிகை கைது! | 'கைதி 2'க்கு முன்பாக ஹீரோவாக நடிக்கப் போகும் லோகேஷ் கனகராஜ் | ‛பாகுபலி தி எபிக்' ஐமேக்ஸ் வடிவிலும் வெளியாகிறது : படக்குழு அறிவிப்பு | ‛கூலி': 3 மில்லியனை நெருங்கும் பிரிமியர் வசூல் | ரசிகர்களுடன் ‛கூலி' படம் பார்த்த திரைப்பிரபலங்கள் | ‛குட் டே' முதல் ‛ஜேஎஸ்கே' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? |
படம் : மன்மதன்
வெளியான ஆண்டு : 2004
நடிகர்கள் : சிம்பு, ஜோதிகா, கவுண்டமணி, சந்தானம், சிந்து துலானி
இயக்கம் : ஏ.ஜே.முருகன்
தயாரிப்பு : எஸ்.கே.கிருஷ்ணகாந்த்
கதாநாயகனாக சிம்பு நடிக்க துவங்கி, வெள்ளி விழா கண்ட முதல் படம், மன்மதன். கதை, திரைக்கதை, இயக்கம் மேற்பார்வை என, முழுக்க முழுக்க சிம்புவின் கைவண்ணத்தில் உருவான படம் இது. ஏ.ஜே.முருகன் பெயர், இயக்குனர் என, இடம்பெற்றிருந்தாலும், அப்பணியையும் சிம்புவே மேற்கொண்டார்.
சிவப்பு ரோஜாக்கள் படத்தின் கதையை தான், கொஞ்சம், 'பட்டி டிங்கரிங்' பார்த்து, மன்மதன் கதையை உருவாக்கியிருந்தனர். சிம்பு, முதல்முறை இரட்டை வேடத்தில் நடித்தார். ஒட்ட வெட்டிய கிராப் தலை; அப்பாவித்தனமான முக பாவங்களோடு வலம் வந்த, கிராமத்து வாசமுடைய தம்பி மதன்ராஜ், அனுதாபத்தை அள்ளினார். அதேபோல, நவநாகரீக தோற்றத்தில் இருக்கும் அண்ணன் மதன்குமார், பெண்களை கொலை செய்யும், 'சைக்கோ' தனமான நடிப்பை காட்டி, மிரளச் செய்தார்.
இப்படத்தில் வடமாநில மாடல் அழகி, யானா குப்தா; உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை தொகுத்து வழங்கிய கவர்ச்சி புயல், மந்திரா பேடி; அப்புறம் நம் ஜோதிகா என, அழகிகளும் அணிவகுத்தனர். ஆபாச காட்சிகளும், கொலைகளும் இடம் பெற்றதால், இப்படத்திற்கு தணிக்கை குழு, 'ஏ' சான்றிதழ் வழங்கியது.
சினிமா பயணத்தில், தனுஷுக்கு எதிராக சிம்பு என்ற பிம்பம், இப்படத்தில் இருந்து தான் உருவானது. இப்படம், பெரும் வெற்றியை பெற்றது. தெலுங்கில், மன்மதா என்ற பெயரில், 'டப்பிங்' செய்யப்பட்டும், கன்னடத்தில், மதனா என்ற பெயரில், 'ரீமேக்'கும் செய்யப்பட்டது. படத்தின் வெற்றியில், யுவன் சங்கர் ராஜாவின் இசைக்கும் முக்கிய பங்கு உண்டு. 'தத்தை தத்தை, மன்மதனே நீ, என் ஆசை மைதிலியே, காதல் வளர்த்தேன்...' பாடல்கள், பட்டி தொட்டி எங்கும் ஒலித்தது.
மிரளச் செய்தான் மன்மதன்!