விமர்சனங்களில் பின்னடைவைச் சந்திக்கும் 'வார் 2' | அமெரிக்காவில் 4 மில்லியன் வசூலை நெருங்கும் 'கூலி' | 50 ஆண்டுகள்... தமிழ் சினிமாவின் 'ராஜா' ரஜினிகாந்த் | இந்த வயதில் இப்படி நடிக்கவே விருப்பம் : ஸ்ரீலீலா | கூலி படம் ரிலீஸ் : பெங்களூர் ராமகிருஷ்ணா ஆசிரமத்துக்கு சென்ற ரஜினி | ஷாரூக், சுனில் ஷெட்டி, அமிதாப், பாபி தியோல் வரிசையில் அமீர்கான் | வளைந்து செல்லாதீர்கள், தைரியமாக இருங்கள் : பெண்களுக்கு சுவாசிகா அறிவுரை | சினிமாவில் நடிக்க வைப்பதாகக் கூறி சிறுமிக்கு வன்கொடுமை; மலையாள நடிகை கைது! | 'கைதி 2'க்கு முன்பாக ஹீரோவாக நடிக்கப் போகும் லோகேஷ் கனகராஜ் | ‛பாகுபலி தி எபிக்' ஐமேக்ஸ் வடிவிலும் வெளியாகிறது : படக்குழு அறிவிப்பு |
படம் : 7ஜி ரெயின்போ காலனி
வெளியான ஆண்டு : 2004
நடிகர்கள் : ரவி கிருஷ்ணா, சோனியா அகர்வால்
இயக்கம் : செல்வராகவன்
தயாரிப்பு : ஏ.எம்.ரத்னம்
காதலி இறந்த பின்னும், அவள் நினைவோடு வாழும் காதலன். இது தான், 7ஜி ரெயின்போ காலனி படத்தின் கரு. காதல் கொண்டேன் படத்தின் வழியாக வெளிச்சம் பெற்ற இயக்குனர் செல்வராகவன், இப்படத்தின் மூலம் தனித்துவமான இயக்குனராக, கவனம் பெற்றார். தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னத்தின் மகன், ரவி கிருஷ்ணா, இப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார்.
'ஹவுசிங் போர்ட்' குடியிருப்பில் வாழும், நடுத்தர வர்க்க குடும்பத்தையும், அங்கு வளரும் இளைஞர்களின் வாழ்வையும், வெகு இயல்பாக பதிவு செய்தது, 7ஜி ரெயின்போ காலனி. சுப்ரமணியபுரம் படத்தில் நடித்த சுவாதி தான், இதில் நாயகியாக நடித்தார். சில காரணங்களால், படத்தில் இருந்து விலக, சோனியா அகர்வால் நாயகியானார்.
'கதிர் - அனிதா' கதாபாத்திரங்களில் ரவி கிருஷ்ணாவும், சோனியா அகர்வாலும் வாழ்ந்திருந்தனர் எனலாம். நாயகனின் தந்தையாக நடித்த விஜயன், நம் தந்தையை கண்முன் நிறுத்தினார். அவர், 'அவனுக்குள்ளயும் ஏதோ இருந்திருக்கு பாரேன்' என சொல்லி கண்ணீர் சிந்தும்போது, தியேட்டரின் கனத்த மவுனம் நிலவியது.
இந்த ஒரு படத்துக்கு மட்டும், 25 தீம் இசைத் துணுக்குகளை உருவாக்கியிருந்தார், யுவன் சங்கர் ராஜா. இசையின் வழியே உணர்வுகளை கடத்தியிருந்தார். அவரின் இசைப் பயணத்தில், 7ஜி ரெயின்போ காலனி மிக முக்கிய படம் .நா.முத்துக்குமாரின் வரிகள், இளைஞர்களை என்னவோ செய்தது. 'நினைத்து நினைத்து பார்த்தால், கனா காணும் காலங்கள், நாம் வயதுக்கு வந்தோம், கண் பேசும் வார்த்தைகள், இது போர்க்களமா, ஜனவரி மாதம், நினைத்து நினைத்து பார்த்தேன்...' ஆகிய பாடல்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன.
வசூலை வாரி குவித்த இப்படம் தெலுங்கு, பெங்காலி, ஒடியா, கன்னடம், ஹிந்தி என, பல்வேறு மொழிகளில், 'ரீமேக்' செய்யப்பட்டது.
7ஜி ரெயின்போ காலனியை மறக்க முடியுமா?