திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
ராதாகிருஷ்ணகுமார் இயக்கத்தில், ஜஸ்டின் பிரபாகரன் இசையமைப்பில், பிரபாஸ், பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடித்துள்ள படம் 'ராதே ஷ்யாம்'.
இப்படத்தின் டிரைலர் சில தினங்களுக்கு முன்பு தெலுங்கு, ஹிந்தி, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் யூடியூபில் வெளியிடப்பட்டது. வெளியான 24 மணி நேரத்தில் அனைத்து மொழிகளிலும் 64 மில்லியன் பார்வைகளைப் பெற்று புதிய சாதனையைப் படத்துள்ளது. இதன் மூலம் 'பாகுபலி 2' டிரைலர் 24 மணி நேரத்தில் படைத்த சாதனையை முறியடித்துள்ளது.
அந்த சாதனையை 'ஆர்ஆர்ஆர்' டிரைலர் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 'ராதே ஷ்யாம்' டிரைலர் முறியடித்துள்ளது. இதன் மூலம் பிரபாஸுக்கான பான்-இந்தியா இமேஜ் அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது. தெலுங்கு டிரைலரை விட ஹிந்தி டிரைலர் அதிகப் பார்வைகளைப் பெற்றுள்ளது.
தற்போது ஹிந்தி டிரைலர் 38 மில்லியன் பார்வைகள், தெலுங்கு டிரைலர் 31, தமிழ் டிரைலர் 5, கன்னட டிரைலர் 2, மலையாள டிரைலர் 3 மில்லியன் பார்வைகைளப் பெற்று மொத்தமாக 80 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. 'ராதே ஷ்யாம்' 2022ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.