காமெடி நடிகராக மாறிய திரிஷ்யம் வில்லன் நடிகர் | வில்லன் நடிகருக்கு ஊக்கமளித்து பதிவிட்ட அவரது பள்ளி ஆசிரியை | 'முத்த மழை' வீடியோ வெளியான பின்பும் சர்ச்சை | நானியின் ‛தி பாரடைஸ்' படப்பிடிப்பு தாமதமாவது ஏன்? | நான் வாழ்ந்து வளர்ந்த இடத்தில் விமான விபத்து நடந்தது வேதனை அளிக்கிறது : உன்னி முகுந்தன் | தமிழுக்கு வரும் நரிவேட்ட ஹீரோயின் | கவுரவ டாக்டர் பட்டம்: அட்லிக்கு வாழ்த்து சொன்ன அல்லு அர்ஜுன் | குடியிருந்த கோயில், அவ்வை சண்முகி, போர் தொழில் - ஞாயிறு திரைப்படங்கள் | திருமணமா...? வதந்திகளை பரப்பாதீர்கள் : அனிருத் | சூர்யாவின் 'டிராப் இயக்குனர்கள்' பட்டியலில் இணைகிறாரா வெற்றிமாறன்? |
தெலுங்கில் மகேஷ்பாபு, கீர்த்தி சுரேஷ் முதல் முறையாக ஜோடி சேர்ந்து நடித்து வரும் படம் சர்க்காரு வாரி பாட்டா. வங்கி கடன்கள் சம்பந்தப்பட்ட கதைகள் உருவாகி வரும் இந்த படத்தை பரசுராம் இயக்க, தமன் இசையமைக்கிறார். இப்படம் வருகிற ஏப்ரல் 1ம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தபோது மகேஷ்பாபுவின் முழங்காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு ஓய்வில் இருந்து வந்தார். அதன் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது மகேஷ் பாபுவின் உடல்நலம் நன்றாக தேறி விட்டதால் ஜனவரி இறுதியில் மீண்டும் சர்க்காரு வாரி பாட்டா படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. மேலும் இப்படத்தின் முதல் பாடல் ஜனவரி இறுதியில் வெளியாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.