சோஹா அலிகானிடமிருந்து எனக்கு எந்த அழுத்தமும் வரவில்லை - குணால் கெமு | நடிகர் ஆனந்த் ராமை கரம்பிடித்தார் நடிகை பிரிகிடா | பாகுபாடு பார்க்காமல் இசையமைக்கும் இளையராஜா | எம்.எஸ்.பாஸ்கர், அவர் மகன் நடிப்பில் ஐந்து மொழிகளில் உருவாகும் ‛பீல் மை லவ்' | விக்ரமின் ‛பவர் ஹவுஸ்' : 100 சதவீதம் கியாரண்டியாம் | தி பாரடைஸ் : அனிருத்தின் சிறப்பான இசை | பாடகர் நரேஷ் ஐயர் திருமணம் | மூக்குத்தி அம்மன் 2 படத்தின் ஓடிடி மற்றும் சாட்டிலைட் உரிமை விற்பனை | டேவிட் ரெட்டி படத்தில் கம்பீரமான தோற்றத்தில் ரம்யா கிருஷ்ணன் | ஓய்வு குறித்த வதந்திகளுக்கு அமிதாப் பச்சன் முற்றுப்புள்ளி |

பாலிவுட்டில் பிரபல நடன இயக்குனராக இருந்து பின்னர் இயக்குனராகவும் மாறியவர் பரா கான். ஷாருக்கான் நடித்த மெயின் ஹூன் நா, ஓம் சாந்தி ஓம் உள்ளிட்ட சில படங்களை இயக்கியுள்ளார். கடந்த 1998ல் மணிரத்னம் இயக்கத்தில் ஹிந்தியில் வெளியான தில்சே (தமிழில் 'உயிரே') படத்தில், ஓடும் ரயில் மீது ஷாருக்கான் மலைக்கா அரோரா உள்ளிட்ட நடன குழுவினர் ஆடிப்பாடும் விதமாக படமாக்கப்பட்டு இடம்பெற்ற சூப்பர் ஹிட்டான சைய்ய சைய்யா என்கிற பாடலுக்கு நடனம் வடிவமைத்தவர் இவர்தான்.
அந்த பாடலுக்கு முதலில் மழைக்கா அரோராவுக்கு பதிலாக நடனமாட இருந்தது நடிகை ஷில்பா ஷிரோத்கர் தான். இவர் நடிகர் மகேஷ்பாபுவின் மனைவியான நம்ரதா ஷிரோத்களின் சகோதரி தான். ஆனால் இந்த பாடலுக்காக ஷில்பா ஷிரோத்கரை ஒப்பந்தம் செய்ய சென்றபோது அவர் உடல் எடை கூடி காணப்பட்டார். இதை பார்த்து அதிர்ச்சியான பரா கான் இந்தப் பாடலில் உன்னால் இந்த உருவத்துடன் எப்படி ஓடும் ரயிலில் நின்றபடி நடனம் ஆட முடியும். அப்படியே நீ நின்றாலும் அங்கே ஷாருக்கான் நிற்பதற்கு இடம் இருக்காதே என கிண்டலாக கூறியவர், இருந்தாலும் உனக்கு 15 நாட்கள் டைம் கொடுக்கிறேன் உடல் எடையை குறைத்தால் உன்னை இந்த பாடலில் நடிக்க வைக்கிறேன் என்று கூறியுள்ளார்.
ஆனால் சொன்னபடி ஷில்பா ஷிரோத்கரால் உடல் எடையை குறைக்க முடியவில்லை. அதன் பிறகு தான் மலைக்கா அரோராவை வைத்து அந்த பாடலை படமாக்கினார் பரா கான். இது குறித்த தகவலை சமீபத்திய வீடியோ ஒன்றில் பகிர்ந்து கொண்டுள்ளார் பரா கான். ஆனாலும் ஒருவேளை இந்த சைய்ய சைய்யா பாடலின் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டால் அதில் நிச்சயமாக ஷில்பா ஷிரோத்கருக்கு வாய்ப்பு கொடுப்பேன் என்றும் நகைச்சுவையாக கூறியுள்ளார் பரா கான்.