5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் |
கன்னடத்தில் உருவாகி பான் இந்தியா படமாக வெளியாகி மிகப்பெரிய வெற்றியை கேஜிஎப் படத்தின் இரண்டு பாகங்களும் பெற்றுள்ளன. இதில் கதாநாயகனாக நடித்த யஷ் மட்டுமல்லாமல் கதாநாயகி ஸ்ரீநிதி ஷெட்டி, முதல் பாகத்தில் வில்லனாக நடித்த கருடா ராம் ஆகியோர் தென்னிந்திய அளவில் மிகப்பெரிய கவனம் பெற்றுள்ளனர். குறிப்பாக முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி ரசிகர்களை ரொம்பவே கவர்ந்து விட்டார்.
இந்த நிலையில் ஸ்ரீநிதி ஷெட்டி தனது பேட்டி ஒன்றில் மலையாள படங்களுக்கு நான் மிகப்பெரிய ரசிகை என்று கூறியுள்ளார். மேலும் மலையாளத்தில் தான் முதன்முதலாக பார்த்த படம் துல்கர் சல்மான் நடித்த சார்லி தான் என்றும் அவர் கூறியுள்ளார்.
சார்லி படத்தின் வித்தியாசமான கதையும், அதில் துல்கர் சல்மானின் நடிப்பும் அவரை ரொம்பவே வசீகரித்து விட்டதால், அந்த சமயத்தில் ஹாஸ்டலில் தங்கி படித்துக்கொண்டிருந்த ஸ்ரீநிதி ஷெட்டி தனது தோழிகள் மற்றும் சக மாணவிகளிடம் அந்தப்படத்தைப் பற்றி புகழ்ந்து கூறி ஒவ்வொருவரையும் சார்லி படம் பார்க்கும்படி சிபாரிசு செய்ய ஆரம்பித்துவிட்டாராம். அதுமட்டுமல்ல அவர்கள் படம் பார்த்துவிட்டு வந்த பிறகு, அவர்களது கருத்தையும் கேட்டு படத்தை பற்றி தான் நினைத்த மாதிரியே அவர்களும் பீல் செய்துள்ளார்களா என்பதையும் கேட்டு தெரிந்து கொள்வாராம்.