மாஸ் மாஸ்டர்: புதிய பட்டத்துடன் 25வது படத்தில் பாபி சிம்ஹா | கதை சிக்கலில் மாட்டிய ஆஸ்கர் படம் | மீண்டும் கதாநாயகனாக நடிக்கும் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் | பிளாஷ்பேக் : தியாகியாக நடித்தால் மக்கள் பட்டை நாமம் போடுவார்கள் என சொன்ன சிவாஜி | பிளாஷ்பேக் : தவறான சிகிச்சையால் மரணம் அடைந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் | 75 வயது பவுனுதாயி ஆக ராதிகா சரத்குமார்: பட ரிலீசுக்கு முன்பே வியாபாரம் ஆன 'தாய்கிழவி' | 2025 முடிவும் இப்படி.. 2026 தொடக்கமும் அப்படி.. | திருமணம் செய்யாதது ஏன்? மாஸ்டர் மகேந்திரன் | மலேசியாவில் 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழா: விஜய் குடும்பத்தினர் பங்கேற்பார்களா? | டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா |

கடந்த 20 வருடங்களாக திரையுலகில் நடிகைகளின் நம்பர் ஒன் இடத்தில் நின்று தனது ஆளுமையை செலுத்தி வருகிறார் நடிகை நயன்தாரா. இவர் முதல்முதலாக அறிமுகமானது மலையாளத்தில் மனசினக்கரே என்கிற படத்தில் தான். ஜெயராம் கதாநாயகனாக நடித்த இந்தப்படத்தை பிரபல இயக்குனர் சத்யன் அந்திக்காடு இயக்கியிருந்தார்.
சமீபத்தில் ஒரு பேட்டியில் நயன்தாராவை அறிமுகப்படுத்திய நிகழ்வு பற்றி இயக்குனர் சத்யன் அந்திக்காடு பேசும்போது, “அந்த படத்திற்காக புதுமுகம் ஒருவரை தேடிக்கொண்டிருந்தபோது நகை விளம்பரத்தில் நடித்த நயன்தாராவின் புகைப்படத்தை பத்திரிக்கை ஒன்றில் பார்த்தேன். அதன் பிறகு அவரை தொடர்புகொண்டு இந்த படத்தில் நடிக்க அழைப்பு விடுத்தேன். ஆரம்பத்தில் அவர் ஒப்புக்கொண்டாலும் பின்னர் படத்தில் நடிக்கவில்லை என்று கூறி பின்வாங்கினார்..
காரணம் அவரது உறவினர்கள் தரப்பில் இருந்து அவர் சினிமாவில் நடிப்பதற்கு நிறைய எதிர்ப்பு கிளம்பியது தான். அதேசமயம் நயன்தாராவின் பெற்றோர் தனது மகள் சினிமாவில் நடிப்பதற்கு எந்தவித மறுப்பும் சொல்லவில்லை. அதனால் நயன்தாராவை உற்சாகமூட்டி இந்த படத்தில் நடிக்க வைத்தேன். டயானா என்கிற பெயரையும் மாற்றி சினிமாவுக்காக நயன்தாரா என பெயர் சூட்டினேன்” என பழைய நினைவுகளை பகிர்ந்துள்ளார் சத்யன் அந்திக்காடு