‛துப்பாக்கி 2': ஐடியா பகிர்ந்த ஏ.ஆர்.முருகதாஸ் | சிரிக்க முடியாத நகைச்சுவை நடிகர்கள்!: மதுரை முத்து | ‛ஓ.ஜி' படத்திலிருந்து பிரியங்கா மோகன் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது! | ‛திரிஷ்யம் 3' படத்தின் படப்பிடிப்பு எப்போது? புதிய தகவல் இதோ! | த்ரிவிக்ரம், வெங்கடேஷ் புதிய கூட்டணி! | பராசக்தி படத்தில் இணைந்த அப்பாஸ்! | மீசைய முறுக்கு 2ம் பாகம் உருவாகிறதா? | சரிந்த மார்க்கெட்டை காப்பாற்ற அதிரடி முடிவெடுத்த தாரா | உயர பறந்த 'லிட்டில் விங்ஸ்' : சாதனையை பகிரும் இயக்குநர் நவீன் மு | தோழிகளால் நடிகை ஆனேன்: சுபா சுவாரஸ்யம் |
மலையாள நடிகர் நிவின் பாலி, இயக்குனர் ராஜூவ் ரவி இயக்கத்தில் துறைமுகம் என்ற புதிய படம் ஒன்றில் நடித்துள்ளார். துறைமுகம் பகுதியில் வாழும் மீனவ மக்களின் வாழ்வியலை மையமாக கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில் மீனவ மக்களுக்கு எதிராக நடந்த அநீதியை தட்டி கேட்கும் ஹீரோவாக நிவின் பாலி நடித்துள்ளார். இந்த படத்தில் நிமிஷா சஜயன், ஜோஜு ஜார்ஜ் மற்றும் இந்திரஜித் சுகுமாறன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கடந்த ஆண்டு வெளியாக இருந்த இப்படம் சில காரணங்களால் திட்டமிட்டப்படி படத்தை வெளியிட முடியவில்லை. இந்நிலையில் இப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகின்ற ஜூன் 3-ஆம் தேதி திரையரங்கில் இந்த படம் வெளியாகிறது.