யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் | 24 மணி நேரத்தில் 'ஜெயிலர்' சாதனையை முறியடித்த 'கூலி' டிரைலர் | 'கூலி' : அமெரிக்க பிரிமீயர் முன்பதிவில் 1 மில்லியன் வசூல் | தெலுங்குத் திரையுலகத்தில் இன்று முதல் ஸ்டிரைக் | 'ஏஐ' மூலம் மாற்றப்பட்ட கிளைமாக்ஸ்: தனுஷ் எதிர்ப்பு | ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! |
கடந்த வெள்ளியன்று மலையாளத்தில் மம்முட்டி நடித்த புழு என்கிற திரைப்படம் வெளியானது. அதற்கு முந்தைய மம்முட்டியின் திரைப்படமான சிபிஐ 5 ; தி பிரைன் என்கிற படம் தியேட்டரில் வெளியான நிலையில் இந்த புழு திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியானது. இந்த படத்தில் கதாநாயகியாக முதன்முறையாக மம்முட்டியுடன் இணைந்து நடித்திருந்தார் பார்வதி. அதேசமயம் இந்த படத்தில் மம்முட்டிக்கு சகோதரி கதாபாத்திரத்தில் தான் நடித்திருந்தார். அறிமுக பெண் இயக்குனர் ரதீனா இந்த படத்தை இயக்கியுள்ளார்.
மனைவி இறந்துவிட்ட நிலையில் பள்ளி செல்லும் மகனை கட்டுக்கோப்பாக வளர்க்க வேண்டும் என நினைக்கும் ஒரு கண்டிப்பான தந்தையாகவும், சாதி மாறி திருமணம் செய்து கொண்ட தனது தங்கையை ஏற்றுக்கொள்ள முடியாமல் ஒரு சாதிய மனநிலை கொண்ட சகோதரனாகவும் இந்த படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் மம்முட்டி. ஓடிடியில் வெளியானாலும் கூட, இந்த படம் மிக அதிகமான நபர்களால் பார்க்கப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இந்த படத்தின் வெற்றியை புழு படக்குழுவினருடன் இணைந்து கொண்டாடியுள்ளனர் மம்முட்டியும் பார்வதியும். கடந்த சில வருடங்களுக்கு முன்பு மம்முட்டியின் படம் ஒன்றை குறித்து விமர்சனம் செய்ததால் அவரது எதிரி போல மம்முட்டியின் ரசிகர்களால் சித்தரிக்கப்பட்ட பார்வதி, இந்த படத்தில் மம்முட்டியுடன் இணைந்து நடித்ததும், இப்போது இந்த நிகழ்வில் அவருடன் இணைந்து கலந்து கொண்டதும் ஆச்சரியமான விஷயமாக தற்போது பார்க்கப்படுகிறது