துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
மலையாளத்தில் கடந்த வாரம் மம்முட்டி நடித்த புழு என்கிற படம் வெளியானது. நேற்று மோகன்லால் நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவாகியுள்ள டுவல்த் மேன் திரைப்படம் வெளியாகியுள்ளது. ஆனாலும் இந்த இரண்டு படங்களுமே தியேட்டருக்கு வராமல் நேரடியாக ஓடிடி தளத்திலேயே வெளியானது இரண்டு நடிகர்களின் ரசிகர்களுக்கும் சற்று வருத்தம் தான்.. என்றாலும் மற்ற படங்களின் தயாரிப்பாளர்கள் சிலருக்கு இது சந்தோசமான விஷயமாக அமைந்து விட்டது.
மோகன்லாலின் படம் தியேட்டர்களில் வெளியாகி இருந்தால் கிட்டத்தட்ட 300 திரையரங்குகள் அவரது படத்திற்கு சென்றுவிடும். ஆனால் அவரது படம் நேரடியாக ஓடிடியிலேயே வெளியாகி விட்டதால், 5 சிறிய படங்கள் நேற்று தியேட்டர்களில் ரிலீசாகி உள்ளன.. அதேசமயம் இப்படி சிறிய படங்கள் தைரியமாக தியேட்டர்களில் வெளியாகும்போது எதற்காக மோகன்லால் ஜீத்து ஜோசப் என்கிற வெற்றிக்கூட்டணியில் உருவான டுவல்த் மேன் படத்தை ஓடிடியில் வெளியிட்டார்கள் என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.