சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் | கிங்டம் படத்திற்கு எதிர்ப்பு : நா.த.க.,வினர் முற்றுகை, கைது | மலையாளத்தில் அறிமுகமான கதிர் | பிளாஷ்பேக்: அம்பிகாவுடன் நெருக்கமாக நடித்த சிவகுமார் | தமிழில் வாய்ப்பு தேடும் ஐஸ்வர்யா மேனன் | பிளாஷ்பேக்: தமிழ் ரசிகர்களை கவர்ந்த முதல் மலையாள லேடி சூப்பர் ஸ்டார் | எனது பாடல்களை அனிருத் பாடல் என்று நினைக்கிறார்கள்: சாம் சி.எஸ் வருத்தம் | பிளாஷ்பேக்: பலாத்கார காட்சியில் பாடலை வைத்து புதுமை படைத்த இயக்குநர் கே பாலசந்தர் | தவறான வீடியோ பதிவுக்கு ஆச்சரியப்பட்ட அல்லு அர்ஜுன் |
மலையாள திரையுலகில் குணசித்திர நடிகரும் பிரபல தயாரிப்பாளருமான விஜய்பாபு கடந்த சில நாட்களுக்கு முன்பு மலையாள நடிகை ஒருவரால் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளானார். தனது படங்களில் நடிக்க வாய்ப்பு அளிப்பதாக கூறி தன்னை பாலியல் ரீதியாக விஜய்பாபு பலாத்காரம் செய்து விட்டார் என்று நடிகை புகார் அளித்ததன் பேரில் விஜய்பாபு மீது வழக்கு தொடரப்பட்டது. இதனைத்தொடர்ந்து விஜய்பாபு வெளிநாட்டிற்கு தப்பிச் சென்று தலைமறைவாக உள்ளார். அதேசமயம் அவர் அங்கிருந்தபடியே இங்கே முன்ஜாமீன் பெறுவதற்கு முயற்சித்து வருகிறார்.
விஜய்பாபுவின் வழக்கறிஞர் நீதிபதியிடம் விஜய்பாபுவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதாகவும் வியாழன், வெள்ளியில் இந்த வழக்கை அவசர வழக்காக கருதி விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். அதை கேட்ட நீதிபதி முதலில் விஜய்பாபு இந்தியாவுக்கு எப்போது திரும்புகிறார் என்பதற்கான ரிட்டர்ன் டிக்கெட்டை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யட்டும். அதன்பிறகு அவருக்கு முன்ஜாமீன் கொடுப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் நிபந்தனை விதித்தார். அதேசமயம் இந்த வழக்கில் விஜய்பாபுவுக்கு எப்படியும் முன்ஜாமீன் கிடைத்துவிடும் என்பதால் அதற்கு முன்பாகவே அவரை கைது செய்வதற்கு போலீசார் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனராம்.