நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! | ‛கில்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோ, வில்லன் யார் தெரியுமா? | அரசியல் கதைகள பின்னனியில் தனுஷ் 54வது படம்! | ஆகஸ்ட் 8ல் 6 படங்கள் ரிலீஸ்… | 2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் | பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு |
மலையாள தயாரிப்பாளரும் குணச்சித்திர நடிகருமான விஜய்பாபு மீது, கடந்த ஏப்ரல் மாதம் அவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் அடித்து துன்புறுத்தியதாகவும் துணை நடிகை ஒருவர் பாலியல் புகார் அளித்தார். விஜய்பாபு மீது வழக்கு பதியப்பட்ட நிலையில் அவர் வெளிநாட்டுக்கு தப்பிச்சென்று தலைமறைவாக இருந்து வருகிறார். அதேசமயம் அங்கிருந்தபடியே தனது வழக்கறிஞர்கள் மூலமாக முன்ஜாமீனுக்கு விண்ணப்பித்தார் விஜய்பாபு.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் முதலில் விஜய்பாபு கேரளா திரும்புவதற்கான தனது ரிட்டர்ன் டிக்கெட்டை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கட்டும் அதன்பின் முன்ஜாமீன் மனு பற்றி பரிசீலிக்கலாம் என கூறியது. அதை தொடர்ந்து துபாயில் இருந்து அவர் வெள்ளிக்கிழமை கேரளா திரும்புவதற்கான விமான டிக்கெட்டை அவரது வழக்கறிஞர்கள் சமர்ப்பித்ததுடன் விஜய்பாபுவை திங்கள் கிழமை அன்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துகின்றோம் என உத்தரவாதமும் அளித்தனர்.
ஆனால் அவர்கள் குறிப்பிட்டதுபோல விஜய்பாபு நேற்று நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.. அதுமட்டுமல்ல, அவர் இன்னும் துபாயில் இருந்தே கிளம்பவில்லை என்பது தெரியவந்துள்ளது.. ஏற்கனவே பாலியல் வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், தான் அளித்த உத்தரவாதத்தை விஜய்பாபு மீறியுள்ளதால் அவருக்கு முன்ஜாமீன் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இருப்பினும் அவரை புதன்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதாக அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனராம்..