திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு பிரபல மலையாள நடிகை ஒருவர் காரில் கடத்தப்பட்டு பாலியல் ரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளானார். அந்த கொடூர நிகழ்வை அதில் ஈடுபட்ட நபர்கள் வீடியோவாகவும் படம் பிடித்தனர். இந்தநிலையில் அந்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதுடன் நடிகர் திலீப்புக்கும் முக்கிய பங்கு உண்டு என்பது விசாரணையில் தெரியவந்து அவரும் எட்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு கைது செய்யப்பட்டார். தொடர்ந்து மூன்று மாத சிறைத்தண்டனைக்குப் பிறகு ஜாமினில் வெளியே வந்தார்.
இந்த வழக்கு சில வருடங்களாகவே மெதுவாக நகர்ந்து வந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணையை மே 30ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என நீதிமன்றம் ஏற்கனவே போலீசாருக்கு காலக்கெடு விதித்திருந்தது. ஆனால் திலீப் மொபைல்போனில் பதிவாகியுள்ள வீடியோ காட்சிகள் சம்பந்தமாக இன்னும் சில சாட்சிகளிடம் விசாரிக்க வேண்டும் அதற்கு இன்னும் சற்று கால அவகாசம் வேண்டும் என போலீஸ் தரப்பில் இருந்து நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட கேரள உயர்நீதிமன்றம் 45 நாட்கள் கூடுதல் அவகாசம் வழங்கி வரும் ஜூலை 15ம் தேதிக்குள் இந்த வழக்கு விசாரணையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.