இந்த மாதிரி வெற்றிக்காக 10 ஆண்டுகள் காத்திருந்தேன் : ‛ஆட்டமா தேரோட்டமா' பாடல் குறித்து ரம்யா கிருஷ்ணன் | நிதின் ஜோடியான பூஜா ஹெக்டே | மறுபிரவேசத்துக்கு வலுவான கதாபாத்திரங்களை தேடும் பிரணிதா | ஜனநாயகன் படப்பிடிப்பு தளத்துக்கு திரண்ட ரசிகர்கள் : பாபி தியோல் ஆச்சரிய தகவல் | பொய் செய்தி பரப்பாதீர்கள் : புகழ் வேதனை | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் பிரேமலு நாயகி | மிருணாள் தாக்கூர் உடன் இணைய விரும்பும் சிவகார்த்திகேயன் | நடிகராக அறிமுகமாகும் கங்கை அமரன் | அஜித் 64 படத்தில் மிஷ்கின்? | உண்மை சம்பவங்கள் அடிப்படையில் சிறை : லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட முதல்பார்வை |
மலையாள சினிமாவின் மும்மூர்த்திகள் என அழைக்கப்படும் நடிகர்களில் நடிகர்களில் மூன்றாவது நபர் தான் நடிகர் சுரேஷ்கோபி. தற்போது அரசியலிலும் ராஜ்யசபா எம்பியாக பொறுப்பு வகித்து வருகிறார். அரசியலுக்காக சிலகாலம் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தவர் தற்போது மீண்டும் சுறுசுறுப்புடன் படங்களில் நடித்து வருகிறார். நேற்று அவரது பிறந்த நாள் என்பதால் அவர் நடித்து வரும் படங்கள் மற்றும் அவர் புதிதாக ஒப்புக்கொண்டுள்ள படங்கள் பற்றிய அறிவிப்புகளும் அப்டேட்டுகளும் வெளியாகியுள்ளன.
அந்தவகையில் சுரேஷ் கோபியின் 254வது படமாக 'ஹைவே-பார்ட் 2' என்கிற படம் உருவாக இருக்கிறது இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சுரேஷ்கோபியே தனது சோஷியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். கடந்த 1995ல் சுரேஷ்கோபி நடிப்பில் ஜெயராஜ் இயக்கத்தில் வெளியான ஹைவே படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. சொல்லப்போனால் அந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கில் டப்பிங் ஆகி இந்த இரண்டு மொழி ரசிகர்களிடையே சுரேஷ்கோபியை ஆக்சன் ஹீரோவாக கொண்டு சேர்த்தது என்றும் சொல்லலாம்.
இந்த படத்தை இயக்கிய ஜெயராஜின் டைரக்சனில் அடுத்ததாக சில படங்களில் இணைந்து நடித்த சுரேஷ்கோபி அவரது டைரக்ஷனில் நடித்த களியாட்டம் என்கிற படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் பெற்றார். கடந்த 2006ல் வெளியான அஸ்வரூதன் என்கிற படத்தில் ஜெயராஜ் டைரக்சனில் நடித்திருந்த சுரேஷ்கோபி கிட்டத்தட்ட 16 வருடம் கழித்து மீண்டும் அவரது இயக்கத்தில் நடிக்கிறார். பரத் நடித்து தமிழில் வெளியான '4 ஸ்டுடண்ட்ஸ்' மற்றும் சில நேரங்களில் உள்ளிட்ட படங்கள் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் இயக்குனர் ஜெயராஜ் நன்கு அறிமுகமானவர்தான்.