மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
பொதுவாக சினிமாவில் மிக பிரபலமானவர்களே பல படங்களில் குணசித்திர நடிகர்களாக நடித்து வரும் நிலையில் ஒரு சில படங்களின் மூலம் எதார்த்தமான சில நடிகர்களும் ரசிகர்களின் கவனத்தை எளிதில் கவர்ந்து விடுகின்றனர். அப்படி ஒருவர்தான் சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ள 'என்ன தான் கேஸ் கொடு' படத்தில் நீதிபதியாக நடித்துள்ள குஞ்சிகிருஷ்ணன். குஞ்சாக்கோ போபன் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படம் ஒரு சாதாரண மனிதன் சாலையில் ஏற்பட்டிருந்த மிகப்பெரிய பள்ளத்தால் எப்படி திருட்டு பட்டதிற்கு ஆளாகிறான் என்பதையும் அதற்கு காரணமாக அமைந்த மாநிலத்தின் பொதுப்பணித்துறை அமைச்சரையே எப்படி நீதிமன்றத்தில் கொண்டு வந்து நிறுத்துகிறான் என்பதையும் மையப்படுத்தி உருவாகி இருந்தது.
இந்த படத்தில் கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் அதிகமான காட்சிகள் நீதிமன்ற அறைக்குள்ளையே நடைபெறும் விதமாக அமைந்திருந்தது. அந்த வகையில் இந்தப்படத்தை தாங்கிப்பிடிக்கும் ஒரு கதாபாத்திரமாக நீதிபதியாக நடித்திருந்த குஞ்சிகிருஷ்ணன், தனது எதார்த்தமான நடிப்பால் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்து விட்டார் என்றே சொல்லலாம். சோசியல் மீடியாவில் யார் இந்த நீதிபதி என்று ரசிகர்கள் தேடும் அளவுக்கு தற்போது இவர் பிரபலமாகிவிட்டார். அடிப்படையில் பள்ளி ஆசிரியராக பணியாற்றிய இவர், கடந்த 2020ல் தான் ஓய்வு பெற்றவர். அதுமட்டுமல்ல, தற்போது தனது கிராமத்தில் பஞ்சாயத்து உறுப்பினராகவும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
சினிமாவில் இதுதான் முதல் படம் என்றாலும், மேடை நாடகங்களில் நடித்த அனுபவம் கொண்டவர். படத்தில் நீதிபதியாக நடித்திருந்தாலும் கூட, இதுவரை நீதிமன்றத்தின் உள்ளே ஒரு முறை கூட நுழைந்ததில்லை. நீதிமன்றங்கள் சம்பந்தமான காட்சி இடம் பெறும் படங்களை கூட இவர் பார்த்ததில்லையாம். ஆனால் படத்தின் இயக்குனர் ரதீஷ் பாலகிருஷ்ணன் சொல்லிக்கொடுத்தபடி தனது மேடை நாடக அனுபவத்தை பயன்படுத்தி தனது கதாபாத்திரத்தை மிகச்சிறப்பாக பிரதிபலித்துள்ளார் குஞ்சிகிருஷ்ணன். இந்த படத்தை தொடர்ந்து இவருக்கு குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக பல படங்களின் வாய்ப்புகள் தேடி வந்துள்ளது.