துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
மலையாள சினிமாவின் முக்கியமான ஆளுமை சீனிவாசன். இயக்குனர், எழுத்தாளர், வசனகர்த்தா, நடிகர் என பன்முகத்தன்மை கொண்டவர். 200க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியிருக்கிறார். 1998ம் ஆண்டு வெளியான 'சிந்தாவிஷ்டாய ஸ்யாமலா' படத்திற்காக தேசிய விருது பெற்றார். இவரது மகன் வினித் சீனிவாசன் தற்போது தந்தையை போன்றே பல துறைகளில் ஜொலித்து வருகிறார்.
வயது மூப்பின் காரணமாக சீனிவாசனுக்கு சமீபத்தில் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன்பின்னர் அவர் படங்களில் நடிக்கவில்லை. இந்நிலையில், சீனிவாசனை நடிகை ஸ்மினு சிஜோ அவரது இல்லத்திற்கு சென்று நேரடியாக சந்தித்துப் பேசினார்.
இந்தச் சந்திப்பு தொடர்பாக அவர் கூறுகையில், ‛‛சீனு சேட்டன் நலமுற்று திரும்ப வேண்டும் என்று பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி. சிறு சிறு உடல் உபாதைகள் தவிர, அவர் பூரண நலமுடன் இருக்கிறார்'' என்கிறார். அவருடன் எடுத்த புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். அதில் சீனிவாசன் ஆளே உருமாறி போயிருக்கிறார்.