தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் படம் காட்பாதர். மோகன்ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப்படம் வரும் அக்டோபர் 5ம் தேதி தியேட்டர்களில் வெளியாக இருக்கிறது. மலையாளத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற லூசிபர் படத்தின் ரீமேக்காக இந்தப்படம் உருவாகி உள்ளது.
இந்தப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடித்துள்ளார். கதாநாயகியாக நயன்தாரா நடித்துள்ளார். தெலுங்கு மற்றும் ஹிந்தியை குறிவைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில் சிரஞ்சீவி சல்மான்கான் இருவரும் இணைந்து நடித்திருப்பதால் அதிகம் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்தநிலையில் இந்த படத்தின் தெலுங்கு மற்றும் ஹிந்தி இரண்டிற்குமான ஓடிடி உரிமை பிரபல நிறுவனம் ஒன்றால் 57 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளது என்கிற தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை ஆர்பி.சவுத்ரியின் சூப்பர்குட் பிலிம்ஸ் மற்றும் சிரஞ்சீவியின் கொனிடேலா புரொடக்சன் கம்பெனியும் இணைந்து தயாரித்துள்ளன. சில மாதங்களுக்கு முன் சிரஞ்சீவி நடிப்பில் வெளியான ஆச்சார்யா திரைப்படம் மிகப்பெரிய தோல்வியைத் தழுவியதால் அதை தனியாக தயாரித்த சிரஞ்சீவியின் தயாரிப்பு நிறுவனத்திற்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டது. அந்த இழப்பை காட்பாதர் வியாபாரமும் வசூலும் ஓரளவு ஈடுகட்டும் என தெலுங்கு திரையுலக வட்டாரத்தில் பேசப்படுகிறது.