போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி |

நாடக நடிகையாக இருந்து சினிமாவுக்கு வந்தவர் கொச்சின் அம்மினி. 100க்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்துள்ள அவர் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தும் இருக்கிறார். அதோடு பாடகியாகவும், பின்னணி குரல் கலைஞராகவும் பணியாற்றி வந்தார். பூர்ணிமா பாக்யராஜ் நடித்த மலையாள படங்களுக்கு பின்னணி குரல் கொடுத்தவர் இவர். குறிப்பாக மஞ்சில் விரிஞ்ச பூக்கள் படத்தில் இவரின் பின்னணி குரல் அப்போது வெகுவாக ரசிக்கப்பட்டது.
பிற மொழி நடிகைகள் நடிக்கும் மலையாள படங்களுக்கு இவர் குரல் கொடுத்து வந்தார். குறிப்பாக சாரதா, கே.ஆர்.விஜயா, விஜயநிர்மா ஆகியோருக்கு ஆஸ்தான பின்னணி குரல் கலைஞராக இருந்தார். 80 வயதான அம்மனி முதுமை காரணமாக பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்தார். கொல்லத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்தார். அவருக்கு மலையாள திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.