2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! | வித் லவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | புத்தாண்டு பிறந்தாச்சு..... ஓடிடியில் புதுப்படங்களும் வரிசை கட்ட ஆரம்பிச்ச்சாச்சு....! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை வெளியீடு | 'சல்லியர்கள்' படத்தை திரையிட தியேட்டர் இல்லை: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனை | ரஜினிகாந்த்தின் ஆசைகள் 2026ல் நிறைவேறுமா? | இளையராஜா இசையில் பாடிய அறிவு, வேடன் | சென்னை பெரம்பூர் பின்னணி கதையில் ரோஜா |

நடிகர் துல்கர் சல்மான் கடந்த சில ஆண்டுகளாகவே கமர்சியல் படங்களை குறைத்துக் கொண்டு வித்தியாசமான கதைகளுக்கும், கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருகிறார். அதனால் தென்னிந்திய மொழிகளைத் தாண்டி பாலிவுட்டிலும் அவருக்கு வரவேற்பு இருக்கிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தெலுங்கில் அவரது நடிப்பில் வெளியான சீதாராமம் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த நிலையில் அடுத்ததாக ஹிந்தியில் தற்போது அவர் நடித்துள்ள என்கிற 'சுப்' என்கிற திரைப்படம் வரும் நவம்பர் 25 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. ஆனால் திரையரங்குகளில் அல்ல... நேரடியாக ஓடிடி தளத்திலேயே வெளியாகிறது.
சீனி கம், பா, ஷமிதாப், பேடுமேன் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் பால்கி இந்த படத்தை இயக்கியுள்ளார். ஒரு கலைஞனின் பழிவாங்கல் என்கிற டேக் லைனுடன் இந்த படம் உருவாகியுள்ளது. அதற்கேற்றபடி இந்த படத்தில் முதன்முறையாக சீரியல் கில்லர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் துல்கர் சல்மான். இந்தப்படம் இதுவரை தான் நடித்த படங்களிலேயே தனக்கு ஒரு பரிசோதனை முயற்சியான படம் என்றும் இது வழக்கமான ஒரு துப்பறியும் படமாக இல்லாது, ரசிகர்களை இருக்கை நுனியில் அமர வைக்கிற, இதயத்தை நிறுத்தி துடிக்க வைக்கும் விதமான ஒரு திரில்லர் படமாக இருக்கும் என்றும் கூறியுள்ளார் துல்கர் சல்மான்.
இந்த படத்தில் இன்னொரு கதாநாயகனாக சன்னி தியோல் நடித்துள்ளார். அதுமட்டுமல்ல பால்கியின் படங்களில் தொடர்ந்து இடம்பெற்று வந்த நடிகர் அமிதாப் பச்சனும் இந்த படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். தமிழ் குணச்சித்திர நடிகை சரண்யா பொன்வண்ணனும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.