தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

மலையாள திரையுலகில் மிகக்குறைந்த வயதிலேயே எந்தவித சங்கோஜமும் இல்லாமல் விதவிதமான, வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் குணச்சித்திர நடிகை லேனா. தமிழில் அநேகன் படத்தில் நடித்த இவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் கூட பரபரப்பை ஏற்படுத்திய திரௌபதி படத்தில் டாக்டராக நடித்திருந்தார். தற்போதும் பிசியான குணச்சித்திர நடிகையாக நடித்து வருகிறார் லேனா.
கடந்த 2004-ஆம் வருடம் அபிலாஷ் குமார் என்கிற கதாசிரியரை திருமணம் செய்த லேனா 2013ல் அவரிடமிருந்து விவாகரத்து பெற்று பிரிந்தார். சமீபத்தில் ஒரு பேட்டியில் தனது விவாகரத்து குறித்து கூறும்போது சினிமாவில் கூட இப்படி ஒரு விவாகரத்து நிகழ்வு நடந்து இருக்காது என்று அதன் சுவாரஸ்யம் குறித்து குறிப்பிட்டார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “என்னுடன் சிறுவயதில் 6ம் வகுப்பிலிருந்து படித்த பள்ளி மாணவன் ஒருவரை விரும்பினேன். பின்னாளில் அவரையே திருமணம் செய்து கொண்டேன். ஒரு கட்டத்தில் இருவரும் தனித்தனியே பிரிந்து வாழலாம் என பரஸ்பரம் முடிவு செய்து விவாகரத்துக்கு விண்ணப்பித்தோம். எங்களது விவாகரத்து வழக்கு முடிவுக்கு வரும் நாளன்று நாங்கள் இருவரும் ஒன்றாகத்தான் நீதிமன்றம் சென்றோம். அப்போது எங்களுடைய வழக்கறிஞர் இன்னொரு வழக்கு விசாரணையில் இருப்பதாகவும் அதுவரை நீங்கள் கேன்டீனில் காத்திருங்கள் என்றும் கூறினார்.
அதன்பிறகு எங்களது விவாகரத்து கிடைத்து விட்ட தகவலுடன் அவர் எங்களை தேடி கேன்டீன் வந்தபோது நாங்கள் இருவரும் ஒன்றாக குலோப் ஜாமூனை பகிர்ந்து சாப்பிட்டுக்கொண்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து நின்றுவிட்டார். இதுபோன்ற ஒரு வழக்கை, இது போன்ற ஒரு தம்பதியினரை அவர் எப்போதும் சந்தித்து இருக்க மாட்டார். சினிமாவில் கூட இப்படி ஒரு விவாகரத்து வழக்கு காட்டப்பட்டிருக்காத்து. பிரிவோம் என முடிவு எடுத்துவிட்ட பின் டீசண்டாக நட்புடன் பிரிவதுதான் நல்லது” என்று கூறியுள்ளார் நடிகை லேனா.