5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் |
மலையாளத்தில் தற்போது பிரியதர்ஷன் இயக்கி வரும் படம் 'கொரோனா பேப்பர்ஸ்'. இதில் ஷேனு நிகாம் நாயகனாகவும், காயத்ரி சங்கர் நாயகியாகவும் நடிக்கிறார்கள். இவர்களுடன் சித்திக், ஷைன் டாம் சாக்கோ, மணியன்பிள்ளை ராஜு, ஸ்ரீதன்யா, விஜிலேஷ், மேனகா சுரேஷ், பிஜு பாப்பன், ஸ்ரீகாந்த் முரளி உள்பட பலர் நடிக்கிறார்கள்.
இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக முக்கிய வேடத்தில் நடிக்கிறார் சந்தியா ஷெட்டி. மிஸ்.இந்தியா போட்டியில் சூப்பர் மாடலாக தேர்வு பெற்ற இவர் ஒரு கராத்தே சாம்பியன். தேசிய அளவிலான போட்டியில் தங்க பதக்கம் வென்றவர். காமென்வெல்த் போட்டியிலும் பங்கேற்றுள்ளார். பெங்காலி படத்தின் மூலம் நடிகையாக அறிமுனமான இவர் சில இந்தி படங்களிலும் நடித்துள்ளார். பிரியதர்ஷன் இயக்கிய 'நிமிர்' படத்தில் ஒரு பாடலுக்கு ஆடினார். 'தாராவி பேங்' என்ற வெப் தொடர் மூலம் பிரபலமானார்.
தற்போது பிரியதர்ஷன் இயக்கும் கொரோன பேப்பர் படத்தில் முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது: நிஜத்தில் நான் ராணுவ அதிகாரியாக வேண்டும் என்று நினைத்தேன். அதற்காகத்தான் கராத்தே கற்றேன். தற்போது எனது ஆசை போலீஸ் அதிகாரியாக சினிமாவில் நிறைவேறி இருக்கிறது. பிரியதர்ஷன் எனக்கு குரு மாதிரி. அவரிடம் நிறைய கற்றுக் கொண்டேன். கொச்சியில் 45 நாள் தங்கியிருந்து நடித்தேன். கொச்சியின் அழகு என்னை கொள்ளை கொண்டது. ஓய்வு கிடைக்கும்போதெல்லாம் கொச்சியை சுற்றிப் பார்த்தேன். தென்னிந்திய படங்களில் நடிக்கும் ஆர்வம் இருக்கிறது. அது கொரோன பேப்பர் படத்தின் வெற்றியை பொறுத்திருக்கிறது. என்கிறார் சந்தியா ஷெட்டி.