போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி |

சமீபத்தில் தெலுங்கு திரையுலகின் கவனிக்கத்தக்க சில இயக்குனர்களான வெங்கடேஷ் மகா, நந்தினி ரெட்டி, இந்திராகாந்தி மோகன கிருஷ்ணா, சிவா நிர்வானா மற்றும் விவேக் ஆத்ரேயா ஆகியோர் ஒன்று கூடி சினிமா குறித்து பொதுவான விவாதம் ஒன்றை நடத்தினார்கள். அதில் இயக்குனர் வெங்கடேஷ் மகா பேசும்போது கே ஜி எப் படத்தில் கதாநாயகனாக நடித்த யஷ்ஷின் ராக்கி பாய் கதாபாத்திரம் உருவாக்கம் குறித்து தனது விமர்சனங்களை கிண்டலடிக்கும் தொனியில் பகிர்ந்து கொண்டார். அங்கே இருந்த மற்ற இயக்குனர்களும் அவரது விமர்சனத்தை கேட்டு வாய்விட்டு சிரித்தனர். இந்த வீடியோ சமீபத்தில் சோசியல் மீடியாவில் வைரலாக பரவியது.
இதனைத் தொடர்ந்து யஷ் ரசிகர்கள் மட்டுமல்லாமல் பொதுவான கன்னட ரசிகர்களும் இயக்குனர் வெங்கடேஷ் மகாவிற்கு சோஷியல் மீடியா மூலமாக தங்களது கண்டனங்களை தெரிவித்து வருவதுடன் அவர் தனது விமர்சனத்திற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். இன்னும் பல ரசிகர்கள் அநாகரிகமான வார்த்தைகளால் அவரை வசைபாடி வருகின்றனர். இந்த நிலையில் தன்னுடைய விமர்சனம் இப்படி விவகாரமாக மாறும் என எதிர்பார்க்காத இயக்குனர் வெங்கடேஷ் மகா தான் பேசியது குறித்து வருத்தம் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், தான் கேஜிஎப் படத்தில் யஷ்ஷின் கதாபாத்திரம் குறித்து கூறிய கருத்துக்களில் இருந்து ஒருபோதும் பின்வாங்க போவதில்லை என்றும் அதேசமயம் நான் அந்த கருத்தை சொன்ன விதம் சரியில்லை என்பதால் அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்றும் கூறியுள்ளார். ஒரு இயக்குனராக, ஒரு படைப்பாளியாக. என்னுடைய கருத்தை கூறினே தவிர யாரையும், எந்த மொழி சினிமாவையும் புண்படுத்த வேண்டும் என்கிற உள்நோக்கத்துடன் பேசவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார் இயக்குனர் வெங்கடேஷ் மகா.