5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் |
மலையாளத்தில் திரிஷ்யம் படத்தில் மிரட்டலான போலீஸ் அதிகாரியாக நடித்தவர் ஆஷா சரத். அந்தப்படத்தின் தமிழ் ரீமேக்கான பாபநாசம், அதைத்தொடர்ந்து கமலின் தூங்காவனம், பின்னர் த்ரிஷ்யம்-2 ஆகிய படங்களிலும் நடித்தார் முன்னைப்போல தற்போது அதிக அளவில் பட வாய்ப்புகள் இல்லை என்றாலும் இப்போதும் சீரான இடைவெளியில் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் ஆஷா சரத். இவரது மகள் உத்ரா வெளிநாட்டில் அக்கவுண்ட்ஸ் சம்பந்தப்பட்ட படிப்பை படித்துள்ளார்.
அம்மாவைப் போலவே நடனத்திலும் சிறந்த பயிற்சி பெற்றுள்ள இவர் ஒரு படத்திலும் நடித்துள்ளார். இன்னொரு பக்கம் மாடலிங் துறையிலும் ஆர்வம் காட்டி வரும் உத்தரா கடந்த வருடம் நடைபெற்ற அழகிப்போட்டி ஒன்றில் கலந்துகொண்டு ரன்னர் ஆக வெற்றி வெற்றி பெற்றுள்ளார்
கடந்த வருடம் அக்டோபர் மாதம் உத்ராவுக்கும் ஆதித்யா என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று நண்பர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் கலந்து கொள்ள உத்ராவின் திருமணம் நடைபெற்று முடிந்தது. இந்த நிகழ்வை திருமணத்திற்கு வராதவர்களும் கண்டுகளிக்க வேண்டும் என்பதற்காக தனது மற்றும் உத்ரா ஆகியோரின் சோசியல் மீடியா பக்கங்கள் மூலமாக லைவ்வாக திருமண காட்சிகள் ஒளிபரப்ப ஏற்பாடு செய்திருந்தார் ஆஷா சரத்.