ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் | 24 மணி நேரத்தில் 'ஜெயிலர்' சாதனையை முறியடித்த 'கூலி' டிரைலர் | 'கூலி' : அமெரிக்க பிரிமீயர் முன்பதிவில் 1 மில்லியன் வசூல் | தெலுங்குத் திரையுலகத்தில் இன்று முதல் ஸ்டிரைக் | 'ஏஐ' மூலம் மாற்றப்பட்ட கிளைமாக்ஸ்: தனுஷ் எதிர்ப்பு | ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! |
கடந்த 2019ல் மலையாளத்தில் லவ் ஆக்சன் டிராமா என்கிற படம் வெளியானது. மிகப்பெரிய வசூலை ஈட்டிய இந்த படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடித்திருந்தார். கதாநாயகனாக நிவின்பாலி நடிக்க மலையாள நடிகர் சீனிவாசனின் மகனும் இயக்குனர் வினீத் சீனிவாசனின் தம்பியுமான தயன் சீனிவாசன் இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். காமெடி நடிகர் அஜூ வர்கீஸ் முக்கிய வேடத்தில் நடித்ததுடன் தயாரிப்பாளர்களில் ஒருவராக இருந்து இந்த படத்தை தயாரித்தும் இருந்தார். நீண்ட நாட்களாகவே மலையாளத்தில் நடிக்காமல் இடைவெளி விட்டிருந்த நயன்தாரா இந்த படத்தின் மூலம் அப்போது மலையாள திரையுலகில் ஒரு ரீ என்ட்ரி கொடுத்தார்.
இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது நான்கு வருடங்கள் கழித்து நாயகன் நிவின்பாலி, தயன் சீனிவாசன் மற்றும் நகைச்சுவை நடிகர் அஜூ வர்கீஸ் மூவரும் மீண்டும் ஒரு படத்திற்காக இணைகிறார்கள். கடந்த வருடம் பிரித்விராஜ் நடிப்பில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய ஜன கன மன படத்தை இயக்கிய டிஜோ ஜோஸ் ஆண்டனி தான் இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் முதல் துவங்கி நடைபெற்று வருகிறது.