துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
மலையாள திரையுலகில் கடந்த 35 ஆண்டுகளில் மம்முட்டி நடித்த ஒரு சிபிஐ டைரி குறிப்பு படத்தின் ஐந்து பாகங்கள் இதுவரை வெளியாகி உள்ளன. இந்திய சினிமாவிலேயே இப்படி ஐந்து பாகங்கள் வெளியானது இந்த படத்திற்கு மட்டும் தான். இந்த ஐந்து பாகங்களின் கதையையும் எழுதியவர் சீனியர் கதாசிரியரான எஸ்.என் சுவாமி என்பவர் தான். இவரது வயது 72. தனது 40 வருட திரையுலக பயணத்தில் கிட்டத்தட்ட 40 படங்களுக்கு மேல் கதை எழுதியுள்ள எஸ்.என் சுவாமி தற்போது முதல்முறையாக டைரக்ஷனில் அடியெடுத்து வைத்துள்ளார். மலையாள திரையுலகிலேயே இப்படி அதிக வயதில் இயக்குனராக அறிமுகமாகும் சாதனைக்கு சொந்தக்காரராகவும் மாறியுள்ளார் எஸ்.என் சுவாமி.
அதேசமயம் இவரது பெரும்பாலான படங்கள் ஆக்சன் மற்றும் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் படங்களாகவே உருவாகியுள்ளன. ஆனால் இவர் முதன்முறையாக இயக்கவுள்ள படம் ஒரு ரொமாண்டிக் காதல் கதையாக உருவாக இருக்கிறதாம். இந்த படத்தில் கதாநாயகனாக நடிகர் தயன் சீனிவாசன் நடிக்கிறார். இவர் நடிகரும் இயக்குனருமான வினித் சீனிவாசனின் தம்பி என்பதுடன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு நயன்தாரா நடிப்பில் வெளியான லவ் ஆக்சன் ட்ராமா படத்தை இயக்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.