பிளாஷ்பேக் : தவறான சிகிச்சையால் மரணம் அடைந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் | 75 வயது பவுனுதாயி ஆக ராதிகா சரத்குமார்: பட ரிலீசுக்கு முன்பே வியாபாரம் ஆன 'தாய்கிழவி' | 2025 முடிவும் இப்படி.. 2026 தொடக்கமும் அப்படி.. | திருமணம் செய்யாதது ஏன்? மாஸ்டர் மகேந்திரன் | மலேசியாவில் 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழா: விஜய் குடும்பத்தினர் பங்கேற்பார்களா? | டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே |

சமீப வருடங்களில் தென்னிந்திய அளவில் அனைத்து மொழிகளிலும் ஹைடெக்கான வில்லன் என்றால் கூப்பிடு ஜெகபதிபாபுவை என்று சொல்லும் அளவிற்கு பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் வில்லனாக நடித்து வருகிறார். அதேபோல எப்படி நடிகர் அஜித் தனது சால்ட் அண்ட் பெப்பர் ஹேர்ஸ்டைலை மாற்றாமல் நடித்து வருகிறாரோ, அதேபோல ஜெகபதிபாபுவும் பெரும்பாலும் அதேபோன்று சால்ட் பெப்பர் ஹேர்ஸ்டைலுடன் தான் தனது படங்களில் நடித்து வருகிறார். ஆனால் தற்போது சல்மான்கான் நடிப்பில் உருவாகியுள்ள கிஸி கா பாய் கிஸி கி ஜான் என்கிற படத்தின் மூலம் பாலிவுட்டிலும் நுழைந்துள்ள ஜெகபதிபாபு இந்த படத்திற்காக தனது முடியை டை அடித்து கருப்பாக மாற்றி நடித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது, “இந்த படத்தில் எனது கதாபாத்திர தோற்றம் இப்படித்தான் இருக்க வேண்டும் என எதுவும் தீர்மானிக்கப்பட்டு இருக்க வில்லை. அதேசமயம் சல்மான்கானும் நானும் இந்த படத்தில் மோதும் காட்சிகள் இருக்கின்றன. இதனால் சல்மான்கான் என்னிடம் வந்து என்னுடைய தலைமுடிக்கு டை அடித்து கருப்பாக மாற்றினால் நன்றாக இருக்கும் என கூறினார்.
அதற்கு காரணமாக அவர் சொல்லும்போது, நான் சண்டையிடும்போது எதிராளி என்னை விட வயதானவராக காட்சியளித்தார் என்றால் அது பார்ப்பதற்கு அவ்வளவு நன்றாக இருக்காது. அதனால் உங்களை இன்னும் கொஞ்சம் இளமை தோற்றத்துடன் காட்டினால் அதில் நம்பகத்தன்மை இருக்கும் என்று கூறினார். இதில் எங்கேயும் அவர் என்னை வற்புறுத்தும் விதமாக, கட்டளை தொனியை வெளிப்படுத்தவே இல்லை. இதை ஒரு வேண்டுகோளாகவே அவர் என்னிடம் வைத்தார். அதனாலேயே நானும் ஒப்புக் கொண்டு நடித்தேன்” என்று கூறியுள்ளார் ஜெகபதிபாபு.