திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
கேரளாவில் நேற்று முன்தினம் இளம் பெண் மருத்துவர் ஒருவர் மருத்துவமனையில் கத்தியால் குக்கி கொல்லப்பட்ட நிகழ்வு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொட்டாரக்கராவில் உள்ள ஒரு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்தவர் வந்தனா தாஸ். சமீபத்தில் தான் மருத்துவ படிப்பை முடித்த இவர் இங்கு டாக்டராக பணியாற்றி வந்த நிலையில் நேற்று முன்தினம் தகராறில் ஈடுபட்ட ஒரு இளைஞரை போலீசார் பிடித்து, அவருக்கு மருத்துவ சிகிச்சை கொடுப்பதற்காக மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.
அப்போது அங்கிருந்த காவலர்களை தாக்கி விட்டு தப்பித்து ஓட முயன்ற அந்த நபர் எதிர்பாராத விதமாக அருகில் இருந்த டாக்டர் வந்தனாவை கத்தியால் பலமுறை குத்தினார். இதில் சம்பவ இடத்திலேயே வந்தனா உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து வந்தனாவின் மறைவுக்கு அரசியல் மற்றும் திரையுலக பிரபலங்கள் பொதுமக்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்
இந்த நிலையில் நடிகர் மம்முட்டி வந்தனாவின் வீட்டிற்கு நேரிலேயே சென்று வந்தனாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்ததுடன் அவரது பெற்றோர் மோகன்தாஸ் மற்றும் வசந்தகுமாரி ஆகியோருக்கு தனது ஆறுதலையும் தெரிவித்தார். மம்முட்டியுடன் அவரது ஆஸ்தான தயாரிப்பாளரான ஆண்டோ ஜோசப் மற்றும் நடிகர் ரமேஷ் பிஷரோடி ஆகியோர் உடன் சென்றிருந்தனர்.