துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
ஆர்ஆர்ஆர் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு, குறிப்பாக அந்த படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைத்த பிறகு அதில் நடித்த ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் இருவருமே உலக அளவில் தெரிந்த நடிகர்கள் ஆகிவிட்டார்கள். தெலுங்கு திரையுலகிலும் முன்னை விட இருவருக்கும் மாஸ் கூடியுள்ளது. இந்த நிலையில் நாளை (மே-20) ஜூனியர் என்டிஆர் தனது 41வது பிறந்தநாளில் அடியெடுத்து வைக்கிறார். இதனைத் தொடர்ந்து இவரது பிறந்தநாளை மிகவும் விமரிசையாக கொண்டாட அவரது ரசிகர்கள் திட்டமிட்டுள்ளனர்
அந்த வகையில் கடந்த 20 வருடங்களுக்கு முன்பு ராஜமவுலி இயக்கத்தில் முதன்முறையாக ஜூனியர் என்டிஆர் நடித்து வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற சிம்மாத்ரி படத்தை ரீ ரிலீஸ் செய்து திரையிட உள்ளனர். இதற்கு முந்தைய வருடங்கள் வரை ஜூனியர் என்.டி.ஆரின் பிறந்த நாளில் அவரது ஹிட் படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வந்தாலும் குறைந்த எண்ணிக்கையிலான திரையரங்குகளிலேயே ரசிகர்களின் திருப்திக்காக ரிலீஸ் செய்யப்பட்டது.
ஆனால் இந்த முறை சிம்மாத்ரி திரைப்படத்தை ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் 1000 திரைகளில் திரையிட இருக்கிறார்களாம். 20 வருடங்களுக்கு முன்பு வெளியான ஒரு படம் இப்படி ஆயிரம் திரைகளில் ரீ ரிலீஸ் செய்து திரையிடப்படுவது இதுதான் முதல் முறை என்கிறார்கள். வெறுமனே ஜூனியர் என்டிஆர் படமாக மட்டுமல்லாமல் ராஜமவுலி டைரக்சனில் இந்த படம் உருவாகி இருப்பதால் தான் இத்தனை காட்சிகள் வெளியிடுவதற்கு திட்டமிட்டுள்ளார்களாம்.