நாகார்ஜுனாவின் வில்லன் வேடத்திற்கான எதிர்பார்ப்பை எகிற வைத்த ரஜினி! | கூலி படத்தை பார்த்துவிட்டு உதயநிதி, லதா ரஜினி வெளியிட்ட தகவல்! | பருத்திவீரன் சரவணன் நடிக்கும் போலீஸ் பேமிலி | ‛பாகுபலி' நாயகன் பிரபாஸுக்கு விரைவில் திருமணம்! | 'கூலி' படத்தின் வியாபாரம் : கோலிவுட் வட்டாரத் தகவல் | இன்று 92வது பிறந்தநாள் கொண்டாடுகிறார் பழம்பெரும் நடிகை வைஜெயந்தி மாலா | கூலி முதல் ஷோ எங்கே தொடங்குகிறது? இதுவரை 11 லட்சம் டிக்கெட் விற்பனை | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தை எதிர்த்து வழக்கு | அன்று ரஜினி படத்தில் அவரது மகன், இன்று அவருடன் போட்டி | பிளாஷ்பேக் : தஸ்தாவெஸ்கி வாழ்க்கையின் தாக்கத்தில் உருவான 'முதல் மரியாதை' |
கடந்த மாதம் மலையாளத்தில் 2018 என்கிற படம் வெளியானது. 2018ல் கேரளாவையே புரட்டிப்போட்ட பெரும் மழை வெள்ளத்தையும் அதன் பாதிப்பையும் அதில் நடைபெற்ற மீட்பு பணிகளையும் மையப்படுத்தி இந்த படம் உருவாகி இருந்தது. டொவினோ தாமஸ், குஞ்சாக்கோ போபன், வினீத் சீனிவாசன், நரேன் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்திருந்தனர். இந்த படத்தை இயக்குனர் ஜூட் ஆண்டனி ஜோசப் என்பவர் இயக்கி இருந்தார். இந்த படம் கிட்டத்தட்ட 175 கோடிக்கு மேல் வசூலித்து மிகப்பெரிய பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் இயக்குனர் ஜூட் ஆண்டனி ஜோசப் பேசுகையில், “இந்த படத்தில் பணியாற்ற அழைத்தபோது இதன் கதையை கேட்டுவிட்டும், இதன் லொக்கேஷனை பார்த்துவிட்டும் கிட்டத்தட்ட 20 ஒளிப்பதிவாளர்கள் இதிலிருந்து பின்வாங்கி சென்று விட்டனர். இறுதியாக வந்தவர் தான் ஒளிப்பதிவாளர் அகில் ஜார்ஜ். இந்த படத்தின் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட சவால்கள் அனைத்தையும் எதிர்கொண்டு இன்று இந்த வெற்றிக்கு மிகப்பெரிய தூணாக மாறியுள்ளார். படத்தில் எது நிஜமாக எடுக்கப்பட்ட காட்சி, எது விஎப்எக்ஸ் என்று தெரியவில்லை என பலர் பாராட்டுவது விஎப்எக்ஸ் குழுவினருக்கு மட்டுமான பாராட்டு அல்ல, ஒளிப்பதிவாளர் அகில் ஜார்ஜுக்கும் அந்தப் பாராட்டில் பெரும்பங்கு உண்டு” என்று கூறியுள்ளார்.