சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

மலையாள திரை உலகில் 25 ஆண்டுகளுக்கு மேலாக தனக்கென ஒரு நிலையான இடத்தை தக்க வைத்திருப்பவர் நடிகர் ஜெயசூர்யா. தமிழில் என் மன வானில், வசூல்ராஜா எம்பிபிஎஸ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது மலையாளத்தில் அனுஷ்கா கதாநாயகியாக நடிக்கும் கத்தனார் என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
சமீபத்தில் இவர் டிசம்பர் 24 மற்றும் 29ஆம் தேதி அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரானார். கடந்த 2023 சுவாதிக் ரஹீம் என்பவர் துவங்கிய சேவ் பாக்ஸ் என்கிற நிறுவனத்திற்கு விளம்பர தூதராக ஒப்பந்தம் செய்யப்பட்டார் ஜெயசூர்யா. இந்த நிறுவனம் தனியாக ஒரு செயலி ஒன்றையும் துவங்கி அதன் மூலம் மிகக் குறைந்த விலையில் எலக்ட்ரானிக் பொருட்களை விற்பனை செய்வதாக அறிவித்தது.
அதுமட்டுமல்ல அதிக வட்டி தருவதாக கூறி முதலீட்டாளர்களையும் அழைத்து கோடிக்கணக்கில் பணம் மோசடி செய்ததாகவும் சுவாதிக் ரஹீம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த இந்த நிறுவனம் ஜெயசூர்யாவுக்கு மிகப்பெரிய தொகை பரிமாற்றம் செய்துள்ளதாக சொல்லப்பட்டதை தொடர்ந்து அமலாக்கத்துறை சமீபத்தில் அது குறித்து நடிகர் ஜெயசூர்யாவை நேரில் வரவழைத்து விசாரித்தது.
இந்த நிலையில் மீண்டும் ஜெயசூர்யா வரும் ஜனவரி ஏழாம் தேதி அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக ஒரு செய்தி வெளியானது. ஆனால் அந்த செய்தியில் எந்த உண்மையும் இல்லை என்று நடிகர் ஜெயசூர்யா மறுத்துள்ளார்.
ஏற்கனவே இரண்டு முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியபடி ஆஜராகி விட்டோம் என்றும் இப்படி ஒரு செய்தியை யார் பரப்புகிறார்கள் என்று தெரியவில்லை என்றும் கூறியுள்ள ஜெயசூர்யா, “சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு சரியாக கணக்கு வழக்குகளை நிர்வகித்து முறையாக வரிகளையும் செலுத்தி வரும் ஒரு பொறுப்புள்ள குடிமகன் நான்” என்று கூறியுள்ளார்.