தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

'அமிகோஸ்' படத்தின் வெற்றிக்கு பிறகு என்.டி.ராமராவ் பேரன் நந்தமுரி கல்யாண் ராம் நடிக்கும் புதிய படத்திற்கு 'டெவில்' என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. நவீன் மேதாராம் இயக்கத்தில் தயாராகும் படத்தில் சம்யுக்தா மேனன் முதன்மையான வேடத்தில் நடிக்கிறார். கதை, திரைக்கதை, வசனத்தை ஸ்ரீகாந்த் எழுதியிருக்க, எஸ்.சௌந்தர்ராஜன் ஒளிப்பதிவு செய்கிறார். ஹர்ஷவர்தன் ராமேஷ்வர் இசையமைக்கிறார். அபிஷேக் பிக்சர்ஸ் சார்பில் அபிஷேக் நாமா தயாரிக்கிறார். இந்த படம் பீரியட் படமாக உருவாகிறது. இதில் நந்தமுரி கல்யாண்ராம் ஆங்கில அரசின் உளவாளியாக நடிக்கிறார். தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம் ஆகிய மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளது.