தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

மலையாள திரையுலகில், தான் இயக்குனராக அறிமுகமான காலகட்டத்தில் கமர்சியல் ஆக்சன் படங்களை இயக்கி வந்தவர் வினயன். பின்னர் அப்படியே தன்னுடைய ரூட்டை மாற்றி பேண்டஸி கதைகளின் பக்கம் பார்வையை திருப்பிய அற்புத தீவு என்கிற படத்தை இயக்கினார். பிரித்விராஜ், மல்லிகா கபூர், மணிவண்ணன், ஜெகதி ஸ்ரீகுமார், கின்னஸ் பக்ரு உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படம் காமிக்ஸ் கதையை மையப்படுத்தி உருவாகி இருந்தது. மலையாளத்தில் மட்டுமல்லாமல் தமிழிலும் இந்த படம் வரவேற்பை பெற்றது.
இந்த படத்தில் உயரம் குறைந்த 300 மனிதர்களும், சித்திரக்குள்ளர்கள் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். அப்படி நடித்த நடிகர் பக்ருவுக்கு இந்த படத்தில் நடித்ததற்காக கின்னஸ் விருது கிடைத்து. அதன்பிறகு கின்னஸ் பக்ரு என்றே அழைக்கப்பட்டு வருகிறார். இந்த படம் வெளியாகி 18 வருடங்கள் கழிந்த நிலையில் தற்போது இதன் இரண்டாம் பாகத்தை இயக்குவதாக அறிவித்துள்ளார் இயக்குனர் வினயன்.
இந்த இரண்டாம் பாகத்தில் கதாநாயகனாக உன்னி முகுந்தன் நடிக்கிறார். முக்கிய வேடத்தில் அபிலாஷ் பிள்ளை என்பவர் நடிக்கிறார். முதல் பாகத்தில் நடித்த கின்னஸ் பக்ருவும் இந்த படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.