கணவர் கிரிஷ் உடன் பிரிவா... : நடிகை சங்கீதா மறுப்பு | தீபாவளி மாதத்தில் வெளியாகும் அனிமேஷன் படம் | பிளாஷ்பேக்: கமர்ஷியல் ஆக்ஷன் படம் இயக்கிய விசு | முகபருவிற்கு உமிழ்நீர் மருந்து என்கிறார் தமன்னா | 90வது பிறந்த நாளை கொண்டாடிய எம்.என்.ராஜம் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்திற்கு பாதுகாப்பு கேட்டு மனு | பிளாஷ்பேக் : இயக்குனராக, தயாரிப்பாளராக தோற்ற டி.ஆர்.மகாலிங்கம் | எம்புரான் சர்ச்சையால் விருது குழுவால் புறக்கணிக்கப்பட்ட ஆடுஜீவிதம் : ஊர்வசி குற்றச்சாட்டு | தலைவன் தலைவி ரூ.75 கோடி வசூல் | விளம்பர வீடியோவில் உலக சாதனை படைத்த தீபிகா படுகோனே |
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி உள்ள ஜெயிலர் திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் மலையாளத்தில் இருந்து மோகன்லால் கன்னடத்தில் இருந்து சிவராஜ் குமார், ஹிந்தியில் இருந்து ஜாக்கி ஷெராப் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பலர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர். இவர்கள் அனைவருமே கொஞ்ச நேரம் வந்தாலும் ரசிகர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் விதமாக இவர்களது கதாபாத்திரத்தை உருவாக்கி இருந்தார் நெல்சன்.
அந்த வகையில் படத்தில் இரண்டு முறை, சில நிமிடங்கள் மட்டுமே வந்து போகும் மோகன்லாலின் கதாபாத்திரமும் அவரது தோற்றமும் அவரின் உடையும் பார்ப்பதற்கே ரொம்பவும் வித்தியாசமாக இருந்தது. ரசிகர்களிடம் வரவேற்பையும் பெற்றுள்ளது. மோகன்லாலின் இந்த கெட்டப்பின் பின்னணியில் இருந்து உருவாக்கியவர் ஒப்பனை கலைஞர் ஜிஷாத் சம்சுதீன். இவர்தான் மோகன்லாலின் பர்சனல் ஸ்டைலிஸ்ட்டும் கூட.
இந்த படத்திற்காக மோகன்லாலுக்கு 70 மற்றும் 80களில் உள்ள கேங்ஸ்டர்களின் கெட்டப்பை உருவாக்குமாறும் தேவைப்பட்டால் பெப்ரோ எஸ்கோபர் போன்ற டிரக் மாபியா லீடர்களின் தோற்றத்திலிருந்து சில ஐடியாக்களை எடுத்துக் கொள்ளுமாறும் இயக்குனர் நெல்சன் இவரிடம் கேட்டுக் கொண்டாராம். அதன்படி கிட்டத்தட்ட 17 விதமான உடைகளை மோகன்லாலுக்காக உருவாக்கிக் கொடுத்தார் ஜிஷாத் சம்சுதீன். அதில் ஐந்து உடைகள் முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்டு இறுதியாக படத்தில் இடம்பெற்றுள்ள தற்போதைய மோகன்லாலின் கெட்டப் மற்றும் உடை ஆகியவை தேர்வு செய்யப்பட்டது என்று கூறியுள்ளார் ஜிஷாத் சம்சுதீன்.