துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
தமிழில் வெளியான 'வேதாளம்' படம், தெலுங்கில் 'போலோ சங்கர்' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வெளியானது. இதில் அஜித் நடித்த கேரக்டரில் சிரஞ்சீவி நடித்திருந்தார். இந்த படம் தோல்வி அடைந்து தயாரிப்பாளருக்கு பெரும் நஷ்டத்தை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தயாரிப்பாளர் நஷ்டம் அடைந்திருக்கும் நிலையிலும் சிரஞ்சீவி தனது சம்பளத்தை கண்டிப்புடன் கேட்டு வாங்கினார் என்றும், தயாரிப்பாளர் தனது வீட்டை விற்று சம்பளத்தை கொடுத்தார் என்றும் தகவல்கள் வெளியானது. இதனை தயாரிப்பாளர் மறுத்துள்ளார்.
இந்த நிலையில் தனக்கு கொடுக்கப்பட்ட சம்பளத்தில் 10 கோடியை சிரஞ்சீவி திருப்பி கொடுத்துள்ள தகவல் வெளியாகி உள்ளது. படத்திற்கு சிரஞ்சீவிக்கு 60 கோடி சம்பளம் நிர்ணயிக்கப்பட்டது. முதல் கட்டமாக 50 கோடி வழங்கப்பட்டதாகவும், இரண்டாவது தவணையாக 10 கோடிக்கு காசோலை வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதில் இரண்டாவது தவணையாக பெறப்பட்ட 10 கோடி ரூபாய்க்கான காசோலையை தயாரிப்பாளருக்கு சிரஞ்சீவி திருப்பி அனுப்பிவிட்டதாக கூறப்படுகிறது.