துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
மம்முட்டி, ஜோதிகா நடித்த 'காதல் தி கோர்' படம் சமீபத்தில் வெளிவந்தது. மம்முட்டி தயாரித்துள்ள இந்தப் படத்தை 'தி கிரேட் இண்டியன் கிச்சன்' படத்தை இயக்கிய ஜியோ பேபி இயக்கியுள்ளார். இதில் தன்பாலின ஈர்ப்பாளராக மம்முட்டி நடித்துள்ளார். இந்த படத்திற்கு பரவலான பாராட்டுகள் கிடைத்துள்ளது. அதோடு வசூலையும் குவித்து வருகிறது.
இந்த படத்தில் தன் பாலின ஈர்ப்பாளராக நடித்துள்ள மம்முட்டி கிறிஸ்தவ சமுதாயத்தை சேர்ந்தவராக காட்டப்படுகிறது. இதற்கு கேரள கத்தோலிக்க திருச்சபையினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கத்தோலிக்க பாதிரியார்கள் அமைப்பின் சார்பில் நடந்த ஆலோசனை கூட்டத்துக்குப் பிறகு அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், கிறிஸ்தவத்துக்கு எதிராக 'காதல் தி கோர்' படம் உருவாக்கப்பட்டுள்ளது. தன்பாலின ஈர்ப்பாளர்களைக் காட்சிப்படுத்த கிறிஸ்தவ நம்பிக்கையைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளனர். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. படத்தின் இயக்குனர் ஜியோ பேபிக்கும், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் மம்முட்டிக்கு கத்தோலிக்க பாதிரியார்கள் திருச்சபை கடும் கண்டனத்தை தெரிவிக்கிறது. என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.