பிரதமர் மோடி உடன் நடிகர் கமல் சந்திப்பு : கீழடி பற்றி கோரிக்கை | கூலி படத்தில் பிரீத்தி கதாபாத்திரம் கொல்லப்படுகிறதா? : ஸ்ருதிஹாசன் பதில் | இட்லி கடை படத்தின் இசை வெளியீடு எப்போது? | சிவகார்த்திகேயன் படங்களுக்கு தொடர்ந்து இசையமைக்கும் சாய் அபயன்கர் | ஹீரோவாக அறிமுகமாகும் ஷங்கரின் மகன் | இந்த வாரம் ஆக்கிரமிக்க போகும் ஓடிடி ரிலீஸ்..! | 'கிங்டம்' படத்திற்கு பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவு | புதுமுகங்களுடன் இணைந்த சோனியா அகர்வால் | பிளாஷ்பேக் : இசை அமைப்பாளர் மலேசியா வாசுதேவன் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் 5 பாடல்களுக்கு நடனமாடிய லலிதா, பத்மினி |
கடந்த சில தினங்களுக்கு முன்பு கேரளாவில் தொடுபுழா அருகில் உள்ள வெள்ளியமூட்டம் என்கிற பகுதியில் மேத்யூ பென்னி என்கிற 15 வயது சிறுவன் வளர்த்து வந்த 20 பசுக்களில் 13 பசுக்கள் விஷத்தன்மை வாய்ந்த செடிகளை தின்றதால் பரிதாபமாக இறந்தன. தனது தந்தையின் மறைவுக்கு பிறகு இந்த பசுக்களையே தங்களது குடும்பத்தின் வாழ்வாதாரமாக நினைத்து அவற்றை பராமரித்து வந்த மேத்யூவும் அவரது குடும்பத்தினரும் மிகப்பெரிய துயரத்தில் ஆழ்ந்தனர். இந்த நிலையில் நடிகர் ஜெயராம் மேத்யூ வசிக்கும் இடத்திற்கே நேரடியாக சென்று அவருக்கு உதவி செய்யும் விதமாக 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையை உதவித்தொகையாக வழங்கியுள்ளார்.
இதுகுறித்து ஜெயராம் கூறும்போது, “கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு இதேபோன்று தன்னுடைய 22 பசுக்கள் எதிர்பாராமல் இறந்த துயரத்தை நான் கண்கூடாக அனுபவித்தவன் என்பதால் மேத்யூவின் இந்த இழப்பு பற்றி என்னால் எளிதாக உணர முடிகிறது” என்று கூறியுள்ளார். மேலும் இதற்கு முன்னதாக இந்த செய்தியை கேள்விப்பட்டு மேத்யூவுக்கு ஒரு லட்சம் வழங்கிய மம்முட்டிக்கும் 2 லட்சம் வழங்கிய பிரித்விராஜுக்கும் தனது நன்றியையும் தெரிவித்துள்ளார் ஜெயராம்.