தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான சுரேஷ் கோபி பரபரப்புக்கு பஞ்சமில்லாதவர். அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குவார். அந்த வகையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கோழிக்கோட்டில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பெண் பத்திரிகையாளர் தோளில் கையை வைத்து தவறாக நடந்ததாக கூறப்பட்டது. அதன்பிறகு சுரேஷ் கோபி “நான் தவறாக நடக்கவில்லை. நான் கடந்து செல்ல வசதியாக அவரது தோளை பிடித்து விலக்கி விட்டேன். அவர் என் மகள் போன்றவர். தவறாக கருதினால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்”. என்று தன்னிலை விளக்கம் அளித்தார்.
என்றாலும் சம்பந்தப்பட்ட பெண் பத்திரிகையாளர் இதுபற்றி கோழிக்கோடு நடக்காவு போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சுரேஷ் கோபி மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையே சுரேஷ் கோபியின் மகள் திருமணம் வருகிற 17ம் தேதி நடைபெறுகிறது. இதனால் அவர் முன் ஜாமீன் கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இதுகுறித்து மாநில அரசு தனது கருத்தினை தெரிவிக்க வேண்டும் என கூறியிருந்தது. இதை தொடர்ந்து இந்த வழக்கில் சுரேஷ் கோபியை கைது செய்யப்போவதில்லை, என்று உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தது கேரள மாநில அரசு. இதனால் சுரேஷ் கோபிக்கு முன் ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.