மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
நடிகர் மோகன்லாலின் நடிப்பில் சமீப காலமாக ஜெயிலர், நேர், மலைக்கோட்டை வாலிபன் ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாகி வந்தன. அதே சமயம் அவர் முதன் முதலாக ஒரு இயக்குனராக மாறி ‛பரோஸ்' என்கிற படத்தையும் இயக்கி வருகிறார். வரலாற்று பின்னணியில் 3டி.,யில் உருவாகி வரும் இந்த படத்தில் போர்ச்சுக்கீசியரான வாஸ்கோடகாமா நம் நாட்டில் நுழைந்து வாணிபம் செய்தபோது சேர்த்துவைத்த சொத்துக்களை பாதுகாக்கும் பரோஸ் என்கிற பாதுகாவலன் கதாபாத்திரத்தில் மோகன்லால் நடிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் நடத்திவரும் கே.எம்.மியூசிக் கன்சர்வேட்டரி மாணவன் லிடியன் நாதஸ்வரம் என்கிற பதினெட்டு வயது சிறுவனை இந்த படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் அறிமுகம் செய்கிறார் மோகன்லால்.
அதே சமயம் ‛ஐ இன் தி ஸ்கை, ஸ்கை டீப் ப்ளூ சீ-3, பிட்ஸ் பர்பெக்ட்' உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்த பிரபல ஹாலிவுட் இசை அமைப்பாளர் மார்க் கிலியன் இந்த படத்தின் பின்னணி கோர்ப்பு பணிகளுக்காக மோகன்லாலுடன் இணைந்து பணியாற்றி வருகிறார். இந்த படத்தின் பெரும்பாலான பணிகள் முடிவடைந்த நிலையில் தற்போது ஹாலிவுட்டில் உள்ள சோனி ஸ்டுடியோவில் இதன் இசையை நன்கு மெருகேற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது குறித்த புகைப்படம் ஒன்றை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டு இந்த தகவலை வெளியிட்டுள்ளார் மோகன்லால்.