மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
இந்தியத் திரைப்படங்களில் சமீப காலங்களில் போதைப் பொருளை மையப்படுத்தி நிறைய படங்கள் உருவாக்கப்படுகிறது. குறிப்பாக தமிழில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படங்களில் போதைப் பொருள் கடத்தல் பற்றித்தான் படத்தின் கதைகளே இருக்கும்.
தெலுங்கில் பிரபல இயக்குனராக சம்பத் நந்தி இயக்கத்தில் சாய் தரம் தேஜ் கதாநாயகனாக நடித்து வரும் படத்திற்கு 'கஞ்சா சங்கர்' என்றே பெயர் வைத்துள்ளார்கள். சில மாதங்களுக்கு முன்பு அப்படத்தின் அறிமுக வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்கள்.
தற்போது அப்படத்தின் தலைப்புக்கும், படத்திற்கும் தெலுங்கானா போதைப் பொருள் தடுப்பு மையம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து அதன் இயக்குனர் சம்பத் நந்தி, படத்தின் தயாரிப்பாளர் நாகவம்சி, கதாநாயகன் சாய் தரம் தேஜ் ஆகியோருக்கும் அவர் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார். தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கம், இயக்குனர்கள் சங்கம், நடிகர்கள் சங்கம் ஆகியோருக்கும் அதன் பிரதி அனுப்பப்பட்டுள்ளது.
“படத்தின் தலைப்பு, கஞ்சா வியாபாரம் செய்யும் கதாபாத்திரத்தை சித்தரிப்பது, அதை பெருமைப்படுத்துவது போல உள்ளது. போதைப் பொருட்களின் விற்பனை, நுகர்வு போன்றவற்றை பெருமைப்படுத்து போல படங்களை உருவாக்க வேண்டாம் என திரைப்படத் துறையினரைக் கேட்டுக் கொள்கிறோம்,” என்றும் அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இங்கு தமிழ் சினிமாவில் ஒரு காமெடி நடிகருக்கு 'கஞ்சா கருப்பு' என்றே பெயர் வைத்துள்ளார்கள். அவர் அதே பெயரில் பல படங்களிலும் நடித்து முடித்துவிட்டார். 'கஞ்சா, கோக்கைன், மது' ஆகியவற்றைக் காட்டாமல் இங்குள்ள சில இயக்குனர்களால் படங்களுக்கு கதையே எழுத முடியாது.