துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
கடந்த வருடம் அனுஷ்கா நடிப்பில் தெலுங்கில் மிஸ் ஷெட்டி மிஸ்டர் பாலிஷெட்டி என்கிற படம் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் அனுஷ்காவுக்கு ஜோடியாக நடித்திருந்தவர் தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகரான நவீன் பாலிஷெட்டி. இந்த படத்தின் மூலம் ரசிகர்களிடம் இன்னும் பிரபலமானார். இவர் தற்போது அடுத்ததாக 'அனகனகா ஒக ரோஜா' என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள டல்லாஸ் பகுதியில் பைக் ஓட்டி சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராமல் விபத்தில் சிக்கியுள்ளார் நவீன் பாலிஷெட்டி.
இதனால் இவரது கையில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை எடுத்து வருகிறார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பே இந்த விபத்து நடந்தாலும் ஆரம்பத்தில் வெறும் காயம் என்று மட்டுமே நினைத்த நிலையில் தற்போது அது எலும்பு முறிவு என தெரிய வந்ததால் அதற்கான சிகிச்சையை மேற்கொண்டு வருகிறார் என்றும் சொல்லப்படுகிறது.