ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் | 24 மணி நேரத்தில் 'ஜெயிலர்' சாதனையை முறியடித்த 'கூலி' டிரைலர் | 'கூலி' : அமெரிக்க பிரிமீயர் முன்பதிவில் 1 மில்லியன் வசூல் | தெலுங்குத் திரையுலகத்தில் இன்று முதல் ஸ்டிரைக் | 'ஏஐ' மூலம் மாற்றப்பட்ட கிளைமாக்ஸ்: தனுஷ் எதிர்ப்பு | ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! |
சினிமாவைப் பொறுத்தவரை தொடர்ந்து மூன்று, நான்கு படங்கள் ஹிட் கொடுத்து விட்டாலே அடுத்ததாக அவர்கள் பெயருக்கு முன்னால் தானாகவே ஒரு பட்டம் சேர்ந்து கொள்ளும். ரசிகர்கள் அன்பாக கொடுத்தார்கள், தயாரிப்பாளர்கள் விரும்பினார்கள் என காரணம் சொல்லிக்கொண்டு சம்பந்தப்பட்ட நடிகர்களும் ஆர்வத்தோடு தங்களுக்கு பட்டம் சூட்டி கொள்வார்கள். இப்படி வளர்ந்து வந்த காலத்தில் தான் நடிகர் பரத் சின்ன தளபதி என்றும் விஷால் புரட்சி தளபதி என்றும் டைட்டில் போட்டுக் கொண்டதும் சில படங்களிலேயே அந்த டைட்டிலை தூக்கி விட்டு அமைதியாகிவிட்டதும் நாம் பார்த்து கடந்த நிகழ்வு தான்.
இப்படி எல்லாம் தனக்கு அடைமொழி எதையும் வைத்துக் கொள்ளாமல் அதே சமயம் தன்னை பற்றி குறிப்பிடும்போது 'தி விஜய் தேவரகொண்டா' என்கிற சிறிய அடைமொழி மட்டுமே இடம்பெறுமாறு பார்த்துக் கொள்கிறார் நடிகர் விஜய் தேவரகொண்டா. இது குறித்து சமீபத்தில் 'பேமிலி ஸ்டார்' புரமோஷனில் இருந்த அவரிடம் கேட்கப்பட்டபோது, “எனக்கு பிடித்த தலைவா, தளபதி, தல என எல்லா பட்டங்களும் ஏற்கனவே ஒவ்வொருவருக்கு சொந்தமாகிவிட்டன” என்று காமெடியாக கூறினார்.
அதன் பின் சீரியஸாக அவர் பேசும்போது, கடந்த சில வருடங்களாகவே தன்னுடைய பட தயாரிப்பாளர்கள் பெயருடன் ஏதாவது பட்டத்தை சேர்க்க வேண்டும் என தன்னிடம் அழுத்தமாக கோரிக்கை வைத்து வந்தனர் என்றும், ஆனால் அதில் தனக்கு உடன்பாடு இல்லை என்று கூறி விட்டதாகவும் கூறினார் விஜய் தேவரகொண்டா. மேலும் உண்மையில் என்னுடைய அப்பா அம்மா வைத்த அந்தப் பெயரை உச்சரிக்கும் போது மட்டுமே இனிமையாக இருக்கிறது, அதனால் அந்தப் பெயரை மறைக்கும் விதமாக வேறு எந்த பட்டமும் எனக்கு தேவையில்லை என்றும், இந்த பெயரின் கம்பீரத்தை கூட்டும் விதமாக 'தி' என்கிற சிறிய வார்த்தையை மட்டும் சேர்த்துக் கொண்டேன் என்றும் கூறியுள்ளார் விஜய் தேவரகொண்டா.