சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் | பிளாஷ்பேக் : எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது கிடைத்திருக்க வேண்டிய கதாபாத்திரங்கள் | மீண்டும் விசாரணைக்கு வருகிறது மான்வேட்டை வழக்கு |
கடந்த பிப்ரவரி மாதம் மம்முட்டி நடிப்பில் வெளியான பிரம்மயுகம் திரைப்படம் பதினெட்டாம் நூற்றாண்டில் நடைபெறும் கதையாக உருவாகி இருந்ததுடன் வித்தியாசமாக 80 வயது மனிதர் கதாபாத்திரத்தில் வில்லத்தனம் காட்டி மிரட்டி இருந்தார் மம்முட்டி. அதை தொடர்ந்து அதற்கு முற்றிலும் மாறாக தற்போது அவர் ஆக்சன் ஹீரோவாக நடித்துள்ள டர்போ திரைப்படம் உருவாகியுள்ளது. ஏற்கனவே மம்முட்டியை வைத்து போக்கிரி ராஜா மற்றும் அதன் இரண்டாம் பாகமாக மதுர ராஜா ஆகிய படங்களை இயக்கிய புலி முருகன் பட இயக்குனர் வைசாக் தான் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
இந்த படத்தில் தெலுங்கு நடிகர் சுனில் மற்றும் கன்னட நடிகர் ராஜ் பி ஷெட்டி இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு பிரபல இயக்குனரான மிதுன் மானுவேல் தாமஸ் கதை எழுதி இருப்பதாலும் வைசாக் மம்முட்டி கூட்டணியில் மூன்றாவதாக இந்த படம் வெளியாக இருப்பதாலும் படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.
இந்த படம் ஜூன் 13ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மூன்று வாரங்கள் முன்னதாக வரும மே 23ஆம் தேதி வெளியாகும் என புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. சம்மர் விடுமுறையிலேயே படத்தை ரிலீஸ் செய்தால்தான் அனைத்து தரப்பு ரசிகர்களும் படத்தைப் பார்க்க வசதியாக இருக்கும் என்பதால் இந்த திடீர் முடிவை எடுத்து உள்ளார்களாம்.