ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
பிரபாஸ் நடிப்பில் நாக் அஸ்வின் இயக்கத்தில் சயின்ஸ் பிக்ஷன் படமாக உருவாகியுள்ளது 'கல்கி 2898 ஏடி'. இந்த படத்தில் கமல்ஹாசன், அமிதாப்பச்சன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க கதாநாயகிகளாக தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வரும் ஜூன் 27ம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆக இருப்பதை தொடர்ந்து இதன் புரமோஷன் நிகழ்ச்சிகள் துவங்கியுள்ளன. அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த படத்தில் பிரபாஸின் நண்பனாக படத்தில் முக்கிய கதாபாத்திரமாக இடம்பெறும் புஜ்ஜி என்கிற கார் அறிமுகப்படுத்தப்பட்டது. ஐதராபாத்தில் இருந்து சென்னைக்கும் வந்த இந்த புஜ்ஜி கார் தமிழக ரசிகர்களையும் கவர்ந்தது.
இதைத்தொடர்ந்து இன்னும் இந்த புஜ்ஜி காரை புரோமோட் பண்ணும் விதமாக கல்கி படக்குழுவினர் இந்த கார் போன்ற ஒரு பொம்மை கார் மற்றும் சில கிராபிக்ஸ் அட்டைகள், ஸ்டிக்கர்கள் ஆகியவை அடங்கிய கிப்ட் பார்சலை உருவாக்கி அவற்றை மகேஷ்பாபுவின் மகள் சிதாரா மற்றும் ராம்சரணின் மகள் கிலின் காரா ஆகியோருக்கு அனுப்பி வைத்துள்ளனர். இப்படி இந்த புஜ்ஜி கார் நட்சத்திர குழந்தைகளின் வீடு தேடிச் சென்ற தகவலும் அதுகுறித்த புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகின்றன. இன்னும் சில நட்சத்திர குழந்தைகளை இந்த புஜ்ஜி கிப்ட் தேடிச்செல்ல இருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.