ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் | 24 மணி நேரத்தில் 'ஜெயிலர்' சாதனையை முறியடித்த 'கூலி' டிரைலர் | 'கூலி' : அமெரிக்க பிரிமீயர் முன்பதிவில் 1 மில்லியன் வசூல் | தெலுங்குத் திரையுலகத்தில் இன்று முதல் ஸ்டிரைக் | 'ஏஐ' மூலம் மாற்றப்பட்ட கிளைமாக்ஸ்: தனுஷ் எதிர்ப்பு | ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! |
மலையாளத்தில் மம்முட்டி, பிரித்விராஜ் இருவரும் முதன்முதலாக இணைந்து நடித்த போக்கிரி ராஜா என்கிற படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் இயக்குனர் வைசாக். அதைத் தொடர்ந்து மோகன்லாலை வைத்து இவர் இயக்கிய புலி முருகன் திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றது. தொடர்ந்து மம்முட்டியை வைத்து மதுர ராஜா, அதன் பிறகு மீண்டும் மோகன்லாலை வைத்து அலோன் ஆகிய படங்களை இவர் இயக்கினாலும் இந்த இரண்டு படங்களும் பெரிய அளவில் வரவேற்பு பெறவில்லை.
இந்த நிலையில் மம்முட்டியை வைத்து மூன்றாவதாக இவர் இயக்கிய டர்போ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றாலும் 50 கோடி வசூலை தாண்டி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
இதைத்தொடர்ந்து மீண்டும் மோகன்லால் படத்தை தான் இயக்கப் போவதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் உறுதியாகவே கூறியுள்ளார் வைசாக். இந்த படத்திற்கான கதை ஏற்கனவே மோகன்லாலிடம் சொல்லப்பட்டு அவரது சொந்த தயாரிப்பு நிறுவனமே இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும் முடிவு செய்யப்பட்டு விட்டதாம். மோகன்லால் தற்போது நடித்து வரும் படங்களின் படப்பிடிப்பை முடித்ததும் இந்த வருட இறுதியில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட வாய்ப்பு இருக்கிறது என்றும் கூறியுள்ளார் வைசாக்.