சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
கன்னடத்தில் மறைந்த பிரபல நடிகர் ராஜ்குமாரின் வாரிசுகளான சிவராஜ்குமார், புனித் ராஜ்குமார் ஆகியோர் திரையுலகிலும் பொதுமக்களிடமும் மிகப்பெரிய செல்வாக்கு பெற்றவர்கள். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு நடிகர் புனித் ராஜ்குமாரின் திடீர் மரணம் அவரது குடும்பத்திற்கு எதிர்பாராத அதிர்ச்சியை அளித்தது. இந்த நிலையில் ராஜ்குமார் குடும்ப வாரிசும் சிவராஜ்குமார், புனித் ராஜ்குமார் ஆகியோரின் சகோதரரான ராகவேந்திரா ராஜ்குமாரின் மகனுமான யுவராஜ் குமார் தனது மனைவியை விவாகரத்து செய்ய விண்ணப்பித்துள்ளது ரசிகர்களிடையே மீண்டும் ஒரு அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
தனது தந்தை மற்றும் சித்தப்பாக்களை போல யுவராஜ் குமாரும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான யுவா என்கிற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அந்தப் படமும் ஓரளவுக்கு நல்ல வெற்றியை பெற்றது. இந்த நிலையில் தான் தனது மனைவி ஸ்ரீதேவி பைரப்பாவை விவாகரத்து செய்ய யுவராஜ் குமார் விண்ணப்பித்துள்ள தகவல் வெளியே வந்துள்ளது. யுவா திரைப்படம் வெளியான சமயத்திலேயே அதன் நிகழ்ச்சிகளில், கொண்டாட்டங்களில் எதிலுமே ஸ்ரீதேவி பைரப்பாவை பார்க்க முடியவில்லை. கடந்த ஒரு வருடமாகவே இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருவதாக சொல்லப்பட்டது. இந்த நிலையில் இந்த விவாகரத்து தகவல் அதை உறுதிப்படுத்தியுள்ளது.