ஜூன் ஜூலையில் பள்ளிகள் வேண்டாம் ; மலையாள இயக்குனர்கள் அரசுக்கு கோரிக்கை | மோகன்லாலும் மம்முட்டியும் கண்டுகொள்ளவில்லை ; பன்னீர் புஷ்பங்கள் சாந்தி கிருஷ்ணா வருத்தம் | ‛ஜனநாயகன்' படத்தில் நரேன் நடிக்கும் வேடம் இதுதான் | ‛கிச்சா' என்கிற பெயர் தன்னுடன் ஒட்டிக்கொண்டது எப்படி ? சுதீப் புதிய தகவல் | 'தீ' ரஜினியை ரி-க்ரியேட் செய்துள்ளாரா லோகேஷ்? | லகான் கிராம மக்களுடன் அமர்ந்து ‛சிதாரே ஜமீன் பர்' படத்தை பார்த்த அமீர்கான் | பிளாஷ்பேக்: காட்சியும், கானமும் “நான் பாடும் பாடல்” | உழைக்கும் கரங்கள், உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன், பீஸ்ட் - ஞாயிறு திரைப்படங்கள் | சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் |
மலையாள திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக நடித்து வந்தவர் சுராஜ் வெஞ்சாரமூடு. அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களிலும் அவர்களுடன் இணைந்து காமெடியில் கலக்கிய சுராஜ் வெஞ்சாரமூடுவை பஹத் பாசில் நடித்த தொண்டிமுதலும் திரிக்சாட்சியம் என்கிற படத்தில் கதையின் நாயகனாக சீரியஸான கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார் இயக்குனர் திலீஷ் போத்தன். அதைத்தொடர்ந்து வெளியான படங்களில் சீரியஸ் கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்க ஆரம்பித்தார் சுராஜ் வெஞ்சாரமூடு. இவற்றில் சில கதாபாத்திரங்கள் வில்லத்தனம் கலந்தவை. இப்படிப்பட்ட கதாபாத்திரங்களில் நடிக்கும்போது எங்கேயுமே அவருக்குள் இருந்த காமெடி நடிகர் நம் கண்களுக்கு தெரியவே இல்லை.
குறிப்பாக டிரைவிங் லைசென்ஸ், ஜன கன மன, கரிங்குன்னம் சிக்ஸஸ், தி கிரேட் இந்தியன் கிச்சன், விக்ருதி, காணாக்கண்ணே உள்ளிட்ட படங்களை உதாரணமாக சொல்லலாம். 2019-ல் வெளியான ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் படத்தில் வயதான கதாபாத்திரத்தில் அவர் சீரியஸாக நடித்திருந்தாலும் அவர் நடிக்கும் காட்சிகள் எல்லாமே கதையின் காரணமாக சிரிப்பையே வரவழைத்தன. அந்த வகையில் ஐந்து வருடங்கள் கழித்து தற்போது மீண்டும் விரைவில் வெளியாக இருக்கும் 'கிர்ர்ர்' என்கிற படத்தில் நகைச்சுவைக்கு திரும்பியுள்ளார் சுராஜ்.
இந்த படத்தில் குஞ்சாக்கோ போபன் கதாநாயகனாக நடித்துள்ளார். ஒரு மிருகக்காட்சி சாலையில் சிங்கத்திடம் சிக்கிக்கொள்ளும் குஞ்சாக்கோ போபனும் அவரை காப்பாற்றுவதாக நினைத்துக்கொண்டு வலிய சென்று சிக்கலில் மாட்டிக்கொள்ளும் சுராஜும் அடிக்கும் கூத்துகள் தான் இந்த படத்தின் கதை. சமீபத்தில் வெளியான டிரைலரும் இதை உறுதிப்படுத்தி உள்ளது. அதனால்தான் சிங்கத்தின் உறுமல் சத்தத்தைதையே (கிர்ர்ர்) படத்தின் டைட்டிலாகவும் வைத்துள்ளனர். அந்த வகையில் சுராஜ் பழைய நகைச்சுவை முகத்தை பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர்.